வாரணாசி, ஏப்.6 பிரதமர் மோடி 11 ஆம் தேதி தனது தொகுதியான வாரணாசிக்குச் செல்ல உள்ளார்.
அங்கு அவரது பொதுக் கூட்டம் நடக்கும் பகுதியைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் அறு வடைக்குத் தயாராக இருந்த தக்காளி, பட் டாணி மற்றும் துவரம் பருப்புப் பயிர்கள் அனைத் தும் முழுமையாக புல் டோசர் கொண்டு அகற்றப்பட்டன.
இதுநாள் வரை புல்டோசர் இஸ்லாமியர் களின் வாழிடங்களை மட்டுமே குறி வைத் திருந்தது. இப்போது ஏழை ஹிந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அழிக்கத் துவங்கி உள்ளது.
வக்ஃபுவாரிய திருத்தப் பட்ட மசோதா தொடர் பான விவாதத்தின் போது தொல். திருமாவளவன் கூறுகையில்
முதலில் இஸ்லாமியர் களை குறி வைத்தனர். பிறகு இதர சிறுபான் மையினர், அதன் பிறகு ஹிந்துக்களின் படி நிலை அடுக்குகளில் அடி மட்டத்தில் உள்ள மக்க ளின் உரிமைகள் மீதும் கைவைப்பார்கள் என்றார்.
அவர் கூறி இரண்டு நாள்களுக்குள் ஏழை விவசாயிகளின் பல மாத உழைப்பு மண்ணாகிப் போயுள்ளது.