டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நீட் தேர்வு முறையை அகற்ற சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஏப்.9இல் அனைத்து கட்சி கூட்டம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றத்தின் மாண்பினை அவமதித்துள்ள ஒன்றிய அரசின் இத்தகைய எதேச்சதிகார போக்கு, அரசமைப்புச் சட்டம் தந்துள்ள கூட்டாட்சி கருத்தியல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களையும், இந்த பேரவையின் தீர்மானங்களையும் ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளவே இல்லை. இதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 2002 குஜராத் மதக் கலவர பின்னணியைக் கொண்டு வெளிவந்துள்ள எம்புரான் திரைப்படம்; தயாரிப்பாளர் கோகுலம் சிட் பண்ட் அதிபர் மீது அமலாக்கத்துறை ரெய்டு.
தி இந்து:
* முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைமை கொறடா முகமது ஜாவேத் மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.அய்.எம்.அய்.எம்.,) தலைவர் அசாதுதீன் ஒவைசி, எம்.பி.யும், வழக்கு தொடுத்தனர்.
* இஸ்ரேலை ‘இனவெறி நாடாக’ அறிவிக்க சிபிஅய்(எம்) இன் 24ஆவது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.
* வக்பு சட்ட திருத்தம் ஆதரவு எதிரொலி: நிதிஷ் குமார் கட்சியான அய்க்கிய ஜனதா தளத்தில் இருந்து இரண்டு எம்.பி.க்கள் உள்ளிட்ட, சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முகமது ஷாநவாஸ் மாலிக், பெட்டியா (மேற்கு சம்பாரண்) மாவட்ட துணைத் தலைவர் நதீம் அக்தர், மாநில பொதுச் செயலாளர் (சிறுபான்மை பிரிவு) முகமது தப்ரேஸ் சித்திக் அலிக் மற்றும் போஜ்பூரைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் முகமது தில்ஷான் ரயீன் ஆகியோர் பதவி விலகினர்.
* மாநிலங்களவையில் வக்பு சட்டத் திருத்த வாக்கெடுப்பில் இந்தியா கூட்டணிக்கு அதிக வாக்குகள்; அதிமுக, நவீன் பட்நாயக்கின் பி.ஜே.டி., சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்., ஆகிய அணிகள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்ததால், எதிர்ப்பு வாக்குகள் அதிகரிப்பு.
* ஹிந்து கோயில்களில், ஹிந்து அல்லாதவர்களை நிர்வாகத்தில் எங்கேயாவது சேர்த்துள்ளார்களா? அப்படி இருக்கையில் வக்பு வாரியத்தில் முஸ்லீம் அல்லாதவர்களை மோடி அரசு சேர்ப்பது நியாயமா? மாநிலங்களவையில் அபிஷேக் சிங்வி, எம்.பி. கேள்வி.
– குடந்தை கருணா