புதுடில்லி, ஏப். 5 இந்தியாவின் மின் நுகா்வு கடந்த மாா்ச் மாதத்தில் 14 ஆயிரத்து 848 கோடி யூனிட்டு களாக உயா்ந்துள்ளது.
இது குறித்து ஒன்றிய அரசின் தரவுகள் தெரிவிப்ப தாவது: கடந்த மாா்ச் மாதத்தில் நாடு முழுவதும் மின் நுகா்வு 14 ஆயிரத்து 848 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம். அப்போது நாட்டின் மின் நுகா்வு 13,895 கோடி யூனிட்டுகளாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 235.22 ஜிகாவாட்டாக உயா்ந்தது. இது 2024 மாா்ச் மாதத்தில் 221.68 ஜிகாவாட்டாக இருந்தது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 250 ஜிகாவாட் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. அதற்கு முன்னா் கடந்த 2023 செப்டம்பா் மாதத்தில் பதிவான 243.27 ஜிகாவாட்டே அதிகபட்ச ஒரு நாள் உச்சபட்ச மின் தேவையாக இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டின் மே மாதத்தில் உச்சபட்ச மின் தேவை பகலில் 235 ஜிகாவாட்டாகவும், மாலை நேரங்களில் 225 ஜிகாவாட்டாகவும் இருக்கும் என்று மின்சாரத் துறை அமைச்சகம் ஆண்டு தொடக்கத்தில் மதிப்பிட்டது. நடப்பு 2025-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 277 ஜிகாவாட்டை எட்டும் என்று ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சகம் கணித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 நிறைவேற்றம்!
புதுடில்லி, ஏப். 5 பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங் களவையில் நிறைவேற்றப்பட்டது.
பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதோடு மட்டுமின்றி அனைத்துப் பேரிடர்களிலும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உதவுவதை இந்தச் சட்டம் உறுதி செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த பல மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இன் படி பேரிடர்களைக் கையாள்வதில் மாநில அரசுகள் சிரமங்களைச் சந்திப்பதாகவும், இதில் உள்ள சவால்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளை மாநில அரசுகளிடமிருந்து பெற்று இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் மூலம் பேரிடர் மீட்புப் பணிகளில் பங்கேற்கும் பல்வேறு அமைப்புகளுக்கு பொறுப்புகள் பிரித்து, சீராக வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் இணைந்து பேரிடரில் பணி யாற்றுவதில் உள்ள படிநிலைகள் குறித்தும் வகை செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது, ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் மின் நுகர்வு 14 ஆயிரத்து 848 கோடி யூனிட்டுகளாக அதிகரிப்பு
Leave a Comment