திராவிடக் கட்டடக்கலை என்பது வரலாற்றில் உள்ள பெரும் கோபுரங்களையும் கோட்டைக் கொத்தளங்களையும் கொண்டது அல்ல, இன்று நமது பயணத்தை எளிமையாக்கும் சில உயர்மட்டப் பாலங்களும் திராவிடக் கலையின் நீட்சிதான்.
பல்லவர்கள் காலம் தொடங்கி இன்று வரை கட்டடக்கலை மீதான காதல் தமிழர்களின் வாழ்வியலில் ஒன்று. தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொழில் துறை வளர்ச்சி கட்டடக்கலை துறையில் பல்வேறு வாயில்களை திறந்திருக்கின்றன.
கிளாவர் லீப் இதை தாவரவியல் படிக்கும் மாணவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் இந்த இலை மிக அற்புதமான பலவழிப் பாதைகளை கடக்கும் எளிமையான மேம்பால அமைப்பைத் தருவதற்கு காரணமாக இருந்தது என்பது வெகு சிலருக்கே தெரியும்.
இந்த கிளாவர் லீப் இண்டர் சேஞ்ச் என்பது அமெரிக்காவில் கென்னடி (கொண்டக்கி), மார்குட்டி ஸோ (விஸ்கோசின்), ப்ரிகோரோசன் (லாஸ் ஏஞ்சல்ஸ்) மற்றும் சர்கிள் ரோடு (சிகாகோ). இது அமெரிக்காவில் புகழ்பெற்ற கிளாவர் லீப் இண்டர்சேஞ்ச் பாலங்கள் ஆகும்.
இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் சென்னையில் 3 இண்டர்சேஞ்ச் கிளாவர் லீப் பாலங்கள் கத்திப்பாரா, மதுரவாயில், மற்றும் கோயம்பேடு.இவை அனைத்தும் முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையில் தமிழ் நாட்டின் நவீனத்தைப் பறைசாற்றும் நவீன திராவிடக் கலை.
சென்னையில் உள்ள கத்திப்பாரா மேம்பாலம் தான் ஆசியாவின் மிகப் பெரிய க்ளோவர் இலை (clover leaf) வடிவ மேம்பாலம்.
கத்திப்பாரா சந்திப்பு சென்னையின் மிக முக்கியமான சந்திப்பு. வாகன ஒட்டிகளுக்கு அது ஒரு குட்டி மலையின் வளைவுகளில் செல்லும் ஒரு பயண அனுபவத்தை ஒவ்வொரு முறையும் தருவதாய் இருக்கும். கிண்டி மேம்பாலம் என்று அழைக்கப்படும் கத்திப்பாரா தெற்கு நெடுஞ்சாலை, அண்ணா சாலை, பூந்தமல்லி மற்றும் உள்வளைவு சாலை ஆகிய முக்கிய சாலைகளின் சந்திப்பு ஆகும்.
கிண்டியில் உள்ள நான்கு முக்கிய சாலைகளின் சந்திப்பில் இருந்த ரவுண்டானாவில் ஏற்பட்ட வாகன நெரிசலை சாமாளிக்க மேம்பாலம் கட்டும் திட்டம் 2005 ஆண்டில் தொடங்கப்பட்டது.
எவ்வித காத்திருப்பும் இன்றி வாகனங்கள் வேவ்வேறு திசைகளில் நான்கு முக்கிய சாலைகளுக்கும் செல்லும் விதமாக இரண்டு அடுக்கு மேம்பாலமாக கிளாவர் லீப் வடிவத்திலான திட்ட வரைப்படம் தயாரனது. 2008 ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சராய் இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் ஆசியாவின் மிகப் பெரிய கிளாவர் லீப் வடிவுடைய மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
இன்று அந்த நான்கு சாலை சந்திப்பை மூன்றே நிமிடங்களில் கடந்து விடலாம், மேம்பாலம் கட்டும் முன்பு குறைந்தது முப்பது நிமிடம் காத்திருக்க வேண்டும். எப்படி சாத்தியமாயிற்று இது?. அறிவோம்
கிளாவர் லீப், இரண்டு, மூன்று அல்லது நான்கு தனி வழிகளை இணைப்பதற்கான எளிய வழி. வைர வடிவ பரிமாற்றங்கள் (Interchanges) கையாள முடியாத சிக்கலான சந்திப்பு சாலைகளில் க்ளோவர் இலை வடிவ மேம்பாலங்கள் உருவாக்கப்படுகின்றன.
வாகனங்கள் எவ்வித காத்திருப்பும் இன்றி தடங்கல் இல்லாமல் இலகுவாக வெவ்வேறு திசைகளில் பயணிக்க முடியும். போக்குவரத்து சிக்னல்கள் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தத் தேவையில்லை.
இவை தடுப்புகள் உள்ள இருவழி சாலைகளாய் இருப்பதால் எதிர் வரும் வாகனகங்களின் இடையூறின்றி செல்ல முடியும். அதன் அடிப்படையிலேயே இவை தனி வழி (freeways) சாலைக்களுக்கான விருப்ப வடிவமாக தற்காலத்தில் மாறிப் போனது. இதன் முக்கிய சாரம்சம் என்ன வென்றால் நீங்கள் முதல் வளைவை தவறவிட்டால் பாலம் மேல் ஏறி அடுத்த வளைவில் இறங்கி இரண்டு அல்லது மூன்று முறை சுற்றி உங்களுக்கான வளைவுக்கு செல்லலாம்.
அதுவும் எவ்வித காத்திருப்புமின்றி, தடையும் இன்றி. க்ளோவர் இலை வடிவுடைய மேம்பாலங்களை வடிவமைத்த பிறகு அந்த இடங்களை பூங்காக்கள், பொது மக்கள் கூடும் பூங்காக்கள், வாகன நிறுத்த வசதி, உணவகங்கள், சிறுவர் விளையாட்டு பகுதிகள், படிப்பகம், பேருந்து நிறுத்தம் போன்றவை உள்ளது.
கத்திப்பாரா
பாரா என்றால்.. காவல் என்று பொருள்… பிரிட்டிஸ் ஆட்சியில் இரவு காவல் பணியில் இருக்கும் காவலர்கள் கையில் தடியை வைத்துக்கொண்டு பாரா உஷார்.. என்று அடிக்கடி அருகில் உள்ள காவலர்களுக்கு சமிக்ஞை கொடுப்பார்கள். அப்படித்தான் இது.. அந்த கால சென்னையின் பரங்கிமலை கண்டோன்மென்ட் காவல் எல்லைக்கு உட்பட்ட எல்லைப் பகுதி.. ராணுவ வீரர்கள் கையில் தடிக்கு பதில் கத்தியை வைத்துக்கொண்டு காவல் காத்த எல்லை. அதனால் கத்திப்பாரா.. என்று பெயர் வந்தது.
இதேபோன்று கோயம்பேடு பாலம் அமைந்துள்ள பகுதியிலும் பூங்கா, பொதுமக்கள் கூடும் இடம், பேருந்து நிறுத்தம், படிப்பகம், சிற்றுண்டி கடைகள் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருவது மிகுந்த சிறப்பானதாகும்.