மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கும் முறை விரைவில் அமல்!

1 Min Read

சென்னை, மார்ச் 3 தமிழ்நாட்டில் மாதந் தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை 6 மாதங் களுக்குள் அமல்படுத் தப்பட வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

மின் கட்டணம்

தமிழ்நாட்டில் மொத் தம் 3.04 கோடிக்கும் அதிக மான மின் இணைப் புகள் உள்ளன. இந்த மின் இணைப்புகளுக் கான கட்டணத்தை மின்வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலித்து வருகிறது. குறிப்பிட்ட தேதிக்குள் கட்டணத்தை செலுத்தாத மின் இணைப்புகளும் துண்டிக்கப்படுகிறது. பின்னா், அபராதத் தொகையுடன் அதற்கான கட்டணத்தை கட்டிய பின்னா் மின்வாரிய ஊழி யா்கள் மீண்டும் இணைப்பை வழங்கு வது வழக்கமான நடைமுறை யாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்துவது என்ற நடைமுறையை மாற்றி, மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் திட்டத்தை கொண்டுவர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக தனது தோ்தல் அறிக்கையில், வாக்குறுதியாக மாதம் ஒரு முறை மின் கட்டண வசூல் என்ற நடைமுறை கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், அண் மையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும், ஸ்மாா்ட் மீட்டா் பொருத் தும் பணி நடை பெற்று முடிந்த உடன், மாதம் ஒருமுறை மின் கட்டணம் என்ற நடைமுறை அமல் படுத்தப்படும் என மின்சாரத் துறை அமைச் சா் செந்தில் பாலாஜி உறுதியளித் திருந்தாா்.

மாதம் ஒரு முறை

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
‘‘ஸ்மாா்ட் மீட்டருக் கான ஒப்பந்தம் கோரப் பட்டுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களுக் குள் தகுதியான 5 முதல் 6 நிறுவனங்களுக்கு பணி யாணை வழங்கப்பட வுள்ளன. இதையடுத்து, அதற்கான பணிகள் மும் முரமாக நடைபெறும். மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை சோதனை அடிப்படையிலாவது தொடங்க உய ரதிகாரிகள் செயல்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *