ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணித்தது ஏன்?
காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
புதுடில்லி,ஏப்.3தனியார் கல்விநிறு வனங்களில்எஸ்.சி., ஓ.பி.சி., மாண வர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணித்தது ஏன்? என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 2006ஆம் ஆண்டு ஒன்றிய அரசு, அரசமைப்பில் கொண்டு வந்த திருத்தத்தை நாடு தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது அர்ஜூன் சிங் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
நமது அரசமைப்பின் சட்டப்பிரிவு 15(5) இல், அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்கள் என எந்த நிறு வனங்களாக இருந்தாலும் சரி எஸ்டி, எஸ்சி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க முடியும் எனத் திருத்தப்பட்டது.
இந்த புரட்சிக்கரமான திருத்தத்தை, அரசு கல்வி நிறுவனங்கள், டில்லி பல்கலைக்கழகம், அய்.அய்.டி.-க்கள், அய்.அய்.எம்-க்கள் ஆகியவற்றில் நாங்கள் முதற்கட்டமாக செய்தோம்.
2014ஆம் ஆண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றம் ஒருமனதாக அரச மைப்பில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம், அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது அல்ல எனத் தெரிவித்திருந்தது.
அதன்பின் தேர்தல் நடைபெற்றது. மோடி அரசு வந்தது. 11 ஆண்டுகள் கடந்தாகிவிட்டன. இது முற்றிலும் புறந்தள்ளப்பட்டுள்ளது. எங்களுடைய கோரிக்கை ஒன்றிய அரசு, சட்டப்பிரிவு (15)5அய் அமல்படுத்த வேண்டும் என்பதுதான்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.