சென்னை, ஏப்.2- உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் ரூ. 14,466 கோடி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சட்டமன்றத்தில் நேற்று (1.4.2025) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட சில சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினார்கள். அதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த விளக்கம் வருமாறு;-
கோரிக்கைகள்
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத, அவசியத் தேவைகளை அந்தந்த சட்ட மன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளின் பேரில் நிறைவேற்றுவதற்காக, ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்திருந்தார். 10 கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக 2,437 பணிகளுக்கான முன்மொழிவுகள் அரசுக்கு வரப்பெற்றன. அவை துறை வாரியாக உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு பரிசீலிக் கப்பட்டன. பின்னர், தலைமைச்செயலாளர் தலைமையிலான குழுவினால் அவற்றில் செயல்படுத்தக்கூடிய பணிகள் தெரிவு செய்யப்பட்டன.
பணிகள் மேற்கொள்ளப்பட்டு..
அதன்படி,2023-2024ஆம் நிதியாண்டில் 784 பணிகள் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் இதுவரை 367 பணி கள் நிறைவேற்றப்பட்டு உள் ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.
2024-2025ஆம் நிகியாண்டில் 469 பணிகள் ரூ.3,503 கோடி மதிப் பீட்டில் எடுத்துக்கொள்ளப் பட்டு, அவற்றில் இதுவரை 65 பணிகள் முடிவுற்று, மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக மொத்தம், இந்தத் திட் டத்தின்கீழ் கடந்த 2 ஆண்டு களில் 1,253 பணிகள் ரூ.14.466 கோடி மதிப்பீட்டில் பல்வேறு துறைகளில் நடைமுறையில் உள்ள திட்டங்களின்கீழ் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டம் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட் டில் இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எடப்பாடி தொகுதியில்
சில உறுப்பினர்கள் பரிந்துரைத்த பணிகளைச் செயல்ப டுத்த இயலாத நிலையில் அவற்றிற்கு பதிலாக மாற்றுப் பணிகள் கோரப்பட்டன. அவற்றிலும் சில பணிகள் செயல்படுத்த இயலாதவை என தெரிய வந்துள்ளது. எடப்பாடி தொகுதியைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சிக் தலைவர் சார்பில் மொத்தம் 10 கோரிக்கைகள் பெறப்பட்டன. அவற்றில் பணிகள் செயல்படுத்துவதற்கு எடுத்து கொள்ளப்பட்டு, அதில் 3 பணிகள் நிறைவேற்றப்பட்டு, ஒரு பணி தற்போது நடை பெற்று வருகிறது.
மீதமுள்ள 6 பணிகளைப் பொறுத்தவரையில் ஒரு பணி துறையின் பரிசீலனையில் தற்போது உள்ளது. மற்ற 5 பணி கள் சாத்தியமில்லை என்று கண்டறியப்பட்டு அவற்றிற்கு பதிலாக மாற்றுப்பணிகளைக் குறிப்பிட்டு வழங்கும்படி மாவட்ட ஆட்சியர் மூலமாக கேட்கப் பட்டுள்ளது. இந்த மாற்றுப் பணிகளை பரீசிலனை செய்து நிறைவேற்றுவதற்கான உரிய நடவடிக்கை கள் விரைந்து மேற்கொள்ளப் படும்.
பாகுபாடு இல்லை
முதலமைச்சர் தொடர்ந்து சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மூலமாக இந்தப் பணிகளை எல்லாம். தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறது.
கடந்த கூட்டத் தொடரின் போது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும், அவருடைய தொகுதியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன? எந்தப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன? என்பதை புகைப்படத்தோடு எடுத்துரைத்து கொடுக்கப் பட்டு உள்ளது. எந்தவிதமான கட்சிப் பாகுபாடு இன்றி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.