நெட், செபுதுடில்லி,ஜூலை7 – உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. (ஆராய்ச் சிப் படிப்பு) முடித்திருப்பது கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ள பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி), முது நிலை பட்டப் படிப்புடன் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் (செட்) தகுதி பெற்றிருப்பது போதுமானது என புதிய அறிவிக்கையை வெளியிட் டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு நேரடி நியமன முறைக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி தொடர்பான வழி காட்டுதலை யுஜிசி கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிட்டது.
அதில், உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. முடித்திருப்பது கட்டாயம் எனவும், இந்த நடை முறையை 2021_-2022 கல்வியாண்டு முதல் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் நடைமுறைப் படுத்த வேண்டும் எனவும் யுஜிசி அறிவுறுத்தியது.
ஆனால், இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு, கல்வி நிறுவனங் கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் நீண்ட நாள்களுக்கு மூடப் பட்டதால், பிஎச்.டி. படிப்பை மேற்கொண்ட மாணவர்களும் தங்களின் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர முடியாத நிலை ஏற் பட்டது.
இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, பிஎச்.டி. கட்டாயம் என்ற 2018-ஆம் ஆண்டு வழிகாட் டுதலை 2021-2022 கல்வியாண்டு முதல் அல்லாமல், 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் நடை முறைப்படுத்த வேண்டும் என்று யுஜிசி கால நீட்டிப்பை வழங்கியது.
இந்நிலையில், இந்த அறிவுறுத் தலை யுஜிசி தற்போது திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்து யுஜிசி தலைவர் எம்.ஜகதீஷ் குமார் 5.7.2023 அன்று கூறுகையில், ‘பல் கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி களில் உதவிப் பேராசிரியர் பணிக் கான நேரடி நியமன முறைக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக ‘நெட் அல்லது செட்’ தகுதி நிர்ணயம் செய்யப்படுகிறது.
பிஎச்.டி. தகுதி கட்டாயமில்லை. அதே நேரம், உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு பிஎச்.டி. கல்வித் தகுதியும் உயர் கல்வி நிறு வனங்களின் விருப்பத் தேர்வு நடை முறையாகத் தொடரும்’ என்றார்.
இதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ‘உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. கட்டாயம் என் பது தற்போதைய கல்வி நடை முறைக்கு உகந்ததாக இருக்காது. பிஎச்.டி. தேவையில்லை என்பதே எங்களின் நம்பிக்கை. இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அளவிலான பணிக்குத்தான் பிஎச்.டி. தேவை. எனவேதான், இந்த நிபந்தனை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது’ என்றார். தகுதி போதுமானது- யுஜிசி