தமிழ்நாட்டில் ஹிந்தியை தைரியமாக எதிர்க்கிறார்கள் மராட்டிய தலைவர் ராஜ்தாக்கரே பாராட்டு

1 Min Read

மும்பை, ஏப்.1 தமிழ்நாட்டில் ஹிந்தியை தைரியமாக எதிர்க் கிறார்கள் என்று மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கூறினார்.

தமிழ்நாட்டில் ஹிந்திக்கு எதிர்ப்பு
மராட்டியத்தில் மண்ணின் மைந்தர்கள் கொள்கையை கடைப்பிடித்து வரும் நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்கூட்டம் மும்பை தாதரில் நடந்தது. கூட்டத் தில் கலந்துகொண்ட கட்சி தலை வர் ராஜ்தாக்கரே பேசியதாவது:-
நமது மும்பைக்கு வருபவர் கள் (வெளிமாநிலத்தினர்) தங் களால் மராத்தி பேச முடி யாது என கூறுகிறார்கள். அது போன்ற வர்களின் கன்னத்தில் அறைய வேண்டும். நாடு பற்றி எல்லாம் என்னிடம் எதுவும் கூறாதீர்கள். எல்லா மாநிலத்துக்கும் அவர்களின் மொழி உள்ளது. அது கண்டிப் பாக மதிக்கப்பட வேண்டும். மும்பையில் மராத்தி மதிக்கப்பட வேண்டும். நாளை முதல் எல்லா வங்கி மற்றும் கடைகளில் சோதனை நடத் துங்கள். அங்கு மராத்தி மொழி பயன்படுத்தப்படுகிறதா என பாருங்கள்.

நீங்கள் எல்லோரும் மராத்திக்கு ஆதரவாக உறுதியாக நிற்க வேண்டும். தமிழ் நாட்டை பாருங்கள். ஹிந்தி வேண்டாம் என தைரியமாக கூறுகிறார்கள். கேரளாவும் கூட அதை செய்கிறது. வாட்ஸ் அப் மற்றும் ஜாதிய கோணத்தில் வரலாற்றைப் படிக்க வேண்டாம் என இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன். உங்களை அரசியல் ரீதியாக பிரிக்கவும், மராத்தியர்களாக நீங்கள் ஒன்று சேர்வதை தடுக்கவும் இது செய்யப்படுகிறது. உங்கள் கவனத்தை திசை திருப்பவும், அதானிக்கு சத்தமில்லாமல் நிலங்களை வழங்கவும் நீங்கள் ஜாதி ரீதியாக பிரிக்கப்படுகிறீர்கள்.
அதானி மும்பை விமான நிலை யத்தை நடத்துகிறார்.கட்டுகிறார். நவிமும்பை விமான நிலையத்தை கட்டுகிறார்.தாராவிமறுசீரமைப்பு திட்டத்தை செய்கிறார். அதானி நாம் அனைவரையும் விட அதிக புத்திசாலியாக மாறிவிட்டார். இவ்வாறு அவர்பேசினார்.

மும்பையில் உள்ள ‘டி-‘மார்ட்’ சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவர், வாடிக்கை யாளரிடம் மராத்தியில் பேச மறுத்து ஹிந்தியில் பேசியதன் காரணமாக அவரை நவநிர் மாண் சேனாவினர் கன்னத் தில் அறைந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *