நாடாளுமன்ற நிலைக்குழு கண்டுபிடிப்பு
புதுடில்லி, ஏப். 1 பணியாளர், பொது குறை கள், சட்டம் மற்றும் நீதித் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழு தனது 145-ஆவது அறிக்கையை நாடா ளுமன்றத்தில் அண்மை யில் தாக்கல் செய்தது. பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தொடர் பான மானியக் கோரிக் கைகள் தொடர்பாக இந்த அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது.
அந்த அறிக்கையில் அதிகாரிகள் நீண்ட காலம் பணியில் இருப்பது ஊழலை வளர்க்கிறது என்றும், எனவே எந்தவொரு அமைச்சகத்திலும் நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பைத் தாண்டி அதி காரிகள் தங்காமல் இருப்பதை உறுதி செய்ய மாற்று நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலி யுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நீண்ட கால பணி
அனைத்து அதிகாரி களுக்கும் சுழற்சி கொள்கை உள்ளது. ஆனால் அது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக பொருளாதார மற்றும் உணர்திறன் மிக்க அமைச்சகங்களில் 8-9 ஆண்டுகளுக்கும் மேலாக சாதகமான அமைச்சகங்கள் அல்லது இடங்களில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் உள்ளனர்.அமைச் சகங்களின் தலைவர்கள் 4 முதல் 5 முறை மாற்றப்பட்ட போதிலும், அதிகாரிகள் தொடர்ந்து பணியில் உள்ளனர். இந்தப் போக்கை மதிப்பிட வேண்டும். அதிகாரிகள் தங்கள் பணிநேரம் முழு வதும் ஒரே அமைச்சகத்தில் இருக்கும் வகையில் தங்கள் பணியிடங்களை மாற்றியமைத்த சம்பவங்கள் கண்டறியப்பட் டுள்ளன. எனவே அத்தகைய இடைவெளியை எந்த தாமதமும் இல்லாமல் சரிசெய்ய வேண்டும்.
குறிப்பிட்ட பணியிடங் களில் அதிகாரிகள் நீண்டகாலம் இருப்பது ஊழலை வளர்க்கிறது. இதை சரிசெய்ய உடனடியாக மாற்று நடவடிக்கைகள் எடுக் கப்பட வேண்டும். அனைத்து இட மாற்றங்களும் கொள்கைப்படி உடனடி யாக செய்யப்பட வேண்டும்.. எந்தவொரு அமைச்சகத்திலும் நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பைத் தாண்டி எந்த அதிகாரியும் தங்கக் கூடாது.
இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.