மக்களை வதைக்கும் ஒன்றிய பிஜேபி அரசு தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

2 Min Read

சென்னை, ஏப்.1 தமிழ்நாட்டில் 46 சுங்கச் சாவடிகளில் இன்று (1.4.2025) அதி காலை முதல் சுங்கக்கட் டணம் உயர்வு அமலுக்குவந்துள்ளது. இதன் மூலம் சுமார் 5 சதவீதம் கட்ட ணம் அதிகமாக வசூலிக் கப்பட உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர்.

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரு கிறது. சுங்கச் சாவடிகளை நெடுஞ் சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப் படையில் கட்ட ணம் வசூலிக்க இந்த அமைச்சகம் அனுமதி -அளித்து வருகிறது. இந்தியா முழுவதும் 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை, 8 வழிச்சாலை என புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சுங்கச்சாவடிகள்

இவ்வாறு அமைக்கப்பட்ட 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. அந்த சுங்கச்சாவடி களில் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இங்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத் தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக மேலும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போது 78 சுங்கச் சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூல் அமலில் உள்ளது. அதன்படி ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.

கட்டணம் உயர்வு

இந்த சுங்கச்சாவடிகளில் மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992-ஆம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ஆம் ஆண்டுபோடப்பட்டசாலை களுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்நி லையில் இன்று (1.4.2025)அதி காலை 12 மணி முதல் சுங்கச் சாவடிகளில் சுமார் 5சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 46 சுங்கச்சாவடிகளுக்கு இன்று (ஏப்ரல்-1ஆம் தேதி) முதல் கட்டணம் உயர்த் தப்பட்டுள்ளது. அந்த வகை யில், அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சிமாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரி யாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சா வடி, திண்டிவனம்-ஆத்தூர், நெல்லூர், நாங்குநேரி, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள பெரும்புதூர், பட்டறைப்பெ ரும்புதூர் சுங்கச்சாவடி, பள் ளிக்கொண்டா, புதுக் கோட்டை- வாகைகுளம், எஸ்.வி.புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, வானக ரம், சூரப்பட்டு, திருப்பாச் சேத்தி, வாணியம்பாடி உள் ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த் தப்பட்டுள் ளது. பரனூர் சுங்கச்சாவடி யில் கார், ஜீப் வாகனங்க ளுக்கு ஒரு முறை மற்றும் திரும்பி வரும் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *