29.03.2025 அன்று சென்னை நந்தனம் அரசினர் கலைக் கல்லூரியில் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ப.தாயகம் கவி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.