ஆவடி, மார்ச் 31- பொதுக் குழு தீர்மானங்களை விளக்கி யும், திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கியும் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார்.
கடந்த 09.03.2025 அன்று ஆவடி பெரியார் மாளிகையில் நடைபெற்ற இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில், 15.02.2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களை தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தின் மூலம் பரப்புரை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 25.03.2025 அன்று முதல் கூட்டமாக திருமுல்லைவாயில் பேருந்து நிலையம் அருகில் தெருமுனை பிரச்சாரக் கூட்டமாக சிறப்பாக நடைபெற்றது.
பகுத்தறிவு, இனவுணர்வுப் பாடல்கள்
தொடக்கத்தில் புரட்சிகர கலை இலக்கியப் பாடகர் மதிவாணன் – அருள்தாஸ் குழுவினர் பகுத்தறிவு, இனவுணர்வுப் பாடல்களைப் பாடினர். நிகழ்ச்சிக்கு ஆவடி மாவட்ட இளைஞரணித் தலைவர் வி. சோபன் பாபு தலைமையேற்றும், ஒருங்கிணைத்தும் சிறப்பித்தார். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சு.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர் செல்வம், ஆவடி மாவட்டத் தலைவர் வெ. கார்வேந்தன், ஆவடி நகரச் செயலாளர் இ. தமிழ்மணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தோழர் மோகன் ராம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆவடி மாவட்ட அமைப்பாளர் முல்லைத் தமிழன், தமிழர் விடுதலைக் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
நிகழ்ச்சியின் தொடக்கவு ரையை மாநில கழக இளைஞ ரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார்.
இறுதியாக திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள்தாஸ் நன்றியுரை தெரிவித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார். முன்னதாக சிறப்பு அழைப்பாளர்களுக்கு இளைஞரணி மாவட்டப் பொறுப் பாளர்கள் பயனாடை அணிவித்து மரியாதை செய்தனர். கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களுக்கு மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன் பயனாடை அணிவித்து மரியாதை செய்தார்.
கலந்து கொண்ட தோழர்கள்
மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம், ஆவடி மாவட்ட துணைத் தலைவர் மு.ரகுபதி, பட்டாபிராம் இரா.வேல்முருகன், தோழர் சுந்தரராஜன், அம்பத்தூர் நகர செயலாளர் அய்.சரவணன், அன்பழகன், பெரியார் பெருந்தொண்டர் ஆ.வெ.நடராஜன், அரும்பாக்கம் சா.தாமோதரன், ஆவடி நகரத் தலைவர் கோ.முருகன், எல்லம்மாள், திருநின்றவூர் நகர செயலாளர் கீதா ராமதுரை, பெரியார் பெருந்தொண்டர் துரை.முத்துகிருட்டிணன், முகப்பேர் தி.முரளி, சுந்தரமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில கலை இலக்கிய துணைச் செயலாளர் கி.மு.திராவிடமணி, மாவட்ட மகளிரணி செயலாளர் சி.ஜெயந்தி, சு.சிவக்குமார், சி.அறிவுமதி, சி.அன்புமணி, உடுமலை வடிவேல், ரா.அருள், வசந்தன், மதுரவாயல் கு.சந்திரசேகரன், திராவிடர் தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் அம்பத்தூர் கி.ஏழுமலை, பாஸ்கரன், கே.இளங்கோவன், மதுரவாயல் பகுதி தோழர் சேத்பட் நாகராஜன், நாகம்மையார் நகர் பகுதி செயலாளர் ரவீந் திரன், க.அரிகிருட்டிணன், மாவட்ட துணைத் தலைவர் வை.கலையரசன், பட்ரவாக்கம் வெ.ரவிச்சந்திரன், ஆவடி பகுத்தறிவாளர் கழக தோழர் கி.நடராஜன், வெ.மா.செல்வராஜ், கொரட்டூர் பகுத்தறிவு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் க.கார்த்திகேயன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் இரா. கலைவேந்தன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சென்ன கிருட்டிணன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ஆவடி நாகராஜன் மற்றும் திருமுல் லைவாயல் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப் பித்தனர். திருமுல்லைவாயில் திராவிடர் கழகத்தின் சார்பில் இரவு உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.