எர்னாகுளம், மார்ச்29- கேரளாவின் மலப்புரம் மாவட்டம் வளஞ்சேரி பகுதியில் போதைப் பொருள் பயன்படுத்தும் 10 பேருக்கு எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்டுளளது.
இதுகுறித்து மலப் புரம் மாவட்ட மருத் துவ அதிகாரி ஆர்.ரேணுகா 27.3.2025 அன்று கூறியதாவது: எச்அய்வி தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ள பாலியல் தொழிலாளிகள், போதைப் பொருள் பயன்படுத்துவோர் உள்ளிட்டோருக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் வழக்க மான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, வளச்சேரி பகுதியில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட் டது. இதில் மேலும் 9 பேருக்கு எய்ட்ஸ் தொற்று கண்டறியப்பட்டது. இவர் களில் 3 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள்.
இவர்கள் அனைவரும் போதைப் பொருள் பயன்படுத்தும் ஒரே குழுவை சேர்ந்தவர்கள். ஒரே ஊசியை இவர்கள் பயன்படுத்தியதால் தொற்று பரவியுள்ளது. இவர்களுடன் தொடர்புடைய வேறு யாருக்கேனும் தொற்று பரவியுள்ளதா என கண்டறிய முயன்று வருகிறோம். அனைவரும் உரிய நேரத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
எச்சரிக்கை! போதைப் பொருள் பயன்படுத்தும் 10 பேருக்கு எய்ட்ஸ் தொற்றுஎச்சரிக்கை! போதைப் பொருள் பயன்படுத்தும் 10 பேருக்கு எய்ட்ஸ் தொற்று
Leave a Comment