மற்ற வங்கிகளின் ஏடிஎம் மய்யங்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் தற்போது ரூ.17 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை, ரூ.19ஆக உயர்த்த ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. பேலன்ஸ் செக் செய்வதற்கான கட்டணம் ரூ.6இல் இருந்து ரூ.7ஆக உயர்த்தப்படவுள்ளது. இதனால், ATM சேவையை குறைவாக கொண்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பாதிக்கப்படுவர். இந்தக் கட்டண உயர்வு மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.