உலகில் தங்கம் இருப்பில் அமெரிக்காவிற்கு முதலிடம் ஒன்பதாவது இடத்தில் இந்தியா

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நியூயார்க், மார்ச் 29- உலகளவில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளில் 9ஆம் இடத்தில் இருக்கும் இந்தியாவிடம் 800 டன் தங்கம் இருப்பு உள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், சீனா ஆறாவது இடத்திலும் உள்ளது.
ஒவ்ெவாரு நாட்டின் கடன் தகுதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை நிர்ணயிப்பதில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கத்தின் இருப்பை அடிப்படையாக கொண்டே அந்த நாட்டின் பொருளாதார உறுதித்தன்மையை நிர்ணயம் செய்ய முடியும்.

நெருக்கடியான காலங்களில் தங்கம் இருப்பு பொருளாதார நிலையை சீரமைக்க உதவுகிறது. அதனால் தான் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும் கூட, தங்கத்தின் விலை அடிக்கடி உயர்ந்து கொண்டே செல்கிறது. வளர்ந்து வரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக தற்போது பல நாடுகள் தங்க இருப்பை அதிகரித்து வருகின்றன.
அந்த நாடுகளின் தலைமை மற்றும் ரிசர்வ் வங்கிகள், தங்கத்தின் இருப்பை பாதுகாப்பான சொத்தாக கருதுகின்றன.

மேற்கண்ட காரணங்கள் மட்டுமின்றி ஒவ்வொருவரின் நிலையான மற்றும் நம்பகமான சொத்தாக தங்கம் மதிப்பிடப்படுகிறது. வரலாற்று ரீதியாக ஒவ்வொரு நாட்டின் நாணயத்தின் மதிப்பை அதிகரிப்பதில் தங்கத்திற்கு முக்கிய பங்குள்ளது. அமெரிக்க டாலரின் விலை குறையும் போது, தங்கத்தின் விலை அதிகரிக்கிறது. தங்கத்தின் இருப்புக்கள் பன்னாட்டு வர்த்தகம் மற்றும் நிதியில் முக்கிய பங்கை வகிக்கின்றன. சில நாடுகள் வர்த்தக ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க அல்லது கடன்களுக்கான பிணையமாக தங்கத்தைப் பயன்படுத்துகின்றன. தங்க இருப்பை அடிப்படையாக கொண்டே உலகளாவிய நிதி அமைப்பும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிகளவில் தங்கம் இருப்பு வைத்திருக்கும் 10 நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. ‘ஃபோர்ப்ஸ்’ நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, உலகிலேயே அதிக தங்க இருப்புக்களை கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது.

அதாவது 8,1336.46 டன் தங்கம் அமெரிக்காவிடம் உள்ளது. ஜெர்மனி 3,352.65 டன் தங்க இருப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இத்தாலி 2,451.84 டன் தங்க இருப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தில் உள்ள பிரான்ஸ் 2,436.88 டன் தங்க இருப்பைக் கொண்டுள்ளது. ரஷ்யா 2,332.74 டன் தங்க இருப்புடன் அய்ந்தாவது இடத்தில் உள்ளது. அதிக நடுத்தர வருவாய் கொண்ட நாடான சீனாவிடம் 2,191.53 டன் தங்கம் இருப்பு உள்ளது. ஆறாவது இடத்தில் சீனா உள்ள நிலையில், ஏழாவது இடத்தில் இருக்கும் சுவிட்சர்லாந்திடம் 1,040.00 டன் தங்க இருப்பு உள்ளது. எட்டாவது இடத்தில் உள்ள ஜப்பானிடம் 845.97 டன் தங்க இருப்பு உள்ளது. 800.78 டன் இருப்பு தங்கத்துடன் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. 10ஆவது இடத்தில் உள்ள நெதர்லாந்து 612.45 டன் தங்க இருப்பை கொண்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *