கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
2 Min Read

29.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 1930இல் தொடங்கிய ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போரை முதலமைச்சர் நிச்சயம் முடித்து வைப்பார்; துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு.
* வர இருக்கும் தேர்தலை மனதில் கொண்டு, பீகார் மாநிலத்துக்கு ரூ.10000 கோடிக்கான திட்டத்தை அறிவித்துள்ளது மோடி அரசு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இருந்து ஜெகதீப் தன்கர் வெளிநடப்பு: டில்லியில் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் நடந்த நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடுமையாக வேறுபாடுகள் எழுந்ததால், அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியேறினார்.
* இந்தியாவிற்கு ஆர்.எஸ்.எஸ். ஒரு அபாயம், உசைதீன் ஒவைசி காட்டம்.
* குஜராத் காவல்துறையை நையாண்டி செய்து பாடல் எழுதிய காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்கர் மீதான எப்.அய்.ஆரை கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என அறிவித்து, ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
* மகாராட்டிரா துணை முதலமைச்சர் ஷின்டேவை கிண்டல் செய்து காமெடி செய்ததான குற்றச்சாட்டில், குனால் கும்ராவுக்கு முன் பிணை வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எதிர்க்கட்சிகள் பேசும் போது, மைக் நிறுத்தப் படுவதாக குற்றச்சாட்டு, மக்களவையில் எதிர்க் கட்சிகள் பிரச்சினை எழுப்பின.
* குஜராத் மாடல்? குஜராத்தில் பொது சுகா தார அமைப்பு மருத்துவர் பற்றாக்குறை, முழுமை யடையாத திட்டங்கள் ஆகியவற்றால் நெருக்கடி யில் உள்ளது என்று ஒன்றிய தணிக்கைத் துறை (CAG) உறுதி.
* மத்தியப் பிரதேச சுகாதார மய்ய செவிலியர்களால் கர்ப்பிணிப் பெண் இரண்டு முறை திருப்பி அனுப்பப்பட்டார், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிறந்த குழந்தை இறந்தது.
தி டெலிகிராப்:
* மோடியா அல்லது ஆர்.எஸ்.எஸ்.சா? பிரதமர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு வருகை தரத் தயாராகும் நிலையில், யார் தலைவர் என்பதைக் காட்ட பாஜக மும்முரம். மோடியின் பிராண்ட் இவ்வாறு பின்னுக்குத் தள்ளப்பட்டு, அரசாங்கம் கூட்டாளிகளை சார்ந்து இருப்பதால், ஆர்.எஸ்.எஸ். தன்னை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பை உணர்ந்துள்ளதாக உள் வட்டாரங்கள் தெரிவித்தன.
– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *