நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விக் கணைகள்
சட்ட அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தல்
புதுடில்லி, மார்ச் 29 டில்லி நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி களை எழுப்பின
கோடிக்கணக்கில் பணம்
டில்லி உயர்நீதிமன்ற நீதி பதியஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த 14-ஆம் தேதி கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த 3 நீதிபதிகள் குழுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நியமித்து உள்ளார்.
நீதிபதி வீட்டில் கோடிக்கணக் கில் பணம் சிக்கிய விவகாரம் நாடாளு மன்றத்தில் பெரும் புயலை கிளப்பியது. இந்த விவகாரத் தில் எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பின.
அந்த வகையில் மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணிஷ் திவாரி இந்த பிரச்சினையை எழுப்பி பேசினார். அவர் கூறியதாவது:-
மனசாட்சியை உலுக்கியது
நீதிபதி வீட்டில் பணம் சிக்கியுள்ள நிலையில் நீதித்துறை குறைபாடுகள் பற்றிய தகவல்கள், நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களின் மன சாட்சியை உலுக்கி உள்ளன.
எனினும் இந்த விவகாரத்தில் குற்றம் நடந்ததா? இல்லையா? என்று இப்போதே கூற இயலாது. நீதித்துறையை மேற்பார்வையிடும் பொறுப்பு நாடாளுமன்றத்திற்கு உள்ளது.
இந்த பிரச்சினையில் விசாரணை நடத்துவதற்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார். எனவே அதை மதித்து, விசாரணை முடியும் வரை நாம் காத்திருக்கவேண்டும். எனினும் அதற்கு முன்பு, இந்த பிரச்சினையில் உண்மையில் என்ன நடந்தது? என்பது தொடர்பாக சட்ட அமைச்சர் அவையில் அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு மணிஷ் திவாரி கூறினார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்
மயிலாடுதுறை காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் சுதா கூறுகையில், ‘நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய தற்கு ஒரு வாரத்துக்குப்பின் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. அது முதல் சில சுவாரசியமான நிகழ்வுகள் நடந் துள்ளன. தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறை, உள் துறை அமைச்சரிடம் புகார் அளிக்கின்றன.
அவருக்கு எப்போது தகவல் கிடைத்தது? நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தபோதும் அவர் ஏன் அமைதியாக இருந்தார்? கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், ‘நீதி பதியின் வீட்டில் இருந்து ஒரு பைசா கூட கைப்பற்றவில்லை என தீய ணைப்புத்துறை அதிகாரி ஏன் கூறினார்? நீதிபதியை காப்பாற்ற முயற்சிப்பது ஏன்? என்றும் கேள்விகளை அடுக் கினார்.
விசாரணை இல்லாதது ஏன்?
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசும்போது, ‘நம்மைப்போல நீதிபதிகளும் பொது ஊழியர்கள்தான். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நீதிபதி மீது ஊழல் புகார் அளிக்கப்பட்டால், ஏன் எந்த விசாரணையும் நடப்பது இல்லை?’ என்று கேள்வி எழுப்பினார். ஊழலில் சிக்கிய நீதிபதிகள் அனைவரும் அலகாபாத் மற்றும் கொல்கத்தா உச்சநீதிமன்றங்களுக்கு மாற்றப்படுவதாக குற்றம் சாட்டிய கல்யாண் பானர்ஜி, இந்த நீதிமன்றங்கள் ஒன்றும் குப்பை கொட்டும் இடங்கள் இல்லை என்றும் சாடினார்.
நீதிபதியஷ்வந்த் வர்மாவை இட மாற்றம் செய்யும் பரிந்துரையை திரும்பப்பெறுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவை பல்வேறு மாநில வக்கீல் சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து வலியுறுத் தினர்.