நவீன மருத்துவத்தின் அதிசயமும் மனிதநேயத்தின் புதிய பிறப்பும்
அமெரிக்காவில் உள்ள ஓஹியோ நகரத்தில் புகழ்பெற்ற கிளீவ்லேண்ட் மருத்துவமனைக்கு மூளைச்சாவடைந்த இளம்பெண்ணின் உடல் கொடையாக தரப்பட்டது.
இதனை அடுத்து மருந்து ஒவ்வாமை காரணமாக முகம் முழுமையாக சிதைந்த வேறு ஒரு பெண்ணுக்கு கொடையாகப் பெறப்பட்ட பெண்ணின் முகத்தை மாற்ற முடிவு செய்தனர்.
இதற்காக நவீன மருத்துவத்தின் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இறந்த உடலில் இருந்து முகம் துல்லியமாக சிறு சிறு இரத்த நாளங்கள் கூட சிதையாமல் எடுக்கப் பட்டது.
பின்னர், முகம் சிதைந்த பெண்ணின் உடலில் பொருத்துவதற்கு 18 மணி நேரம் தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இடையில் சில நிமிடங்கள் மட்டுமே ஓய்வெடுத்த அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், அமெரிக்க பூர்வீக குடிப்பெண்ணான டி ஸ்டபிள்ஃபீல்டு என்ற அந்த இளம் பெண்ணின் முகத்தில் வெற்றிகரமாக பொருத்தினர். அமெரிக்காவில் முகமாற்று அறுவை சிகிச்சை பெற்ற முதல் இளம் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
இறந்துபோன பெண்ணின் உறவினர்கள் தங்களின் மகள் மீண்டும் உயிர் பெற்றுவிட்டதாக கருதுகின்றனர். கெட்டியின் பெற்றோரோ தனது மகள் புதிய பிறப்பு பிறந்துள்ளதாக கருதுகின்றனர்.
அறிவியல் உலகில் மிகவும் முக்கியமான ஒரு கட்டத்தை இந்த அறுவைச் சிகிச்சை மூலம் எட்டியுள்ளது.
ஏற்கெனவே தலை மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பாக அய்ரோப்பா விலும், தென் ஆப்பிரிக்காவிலும் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை தொடர்ந்து இயங்கவைப்பது தொடர்பான சவால்கள் இருப்பதால் மேலும் ஆய்வுகள் நடந்துகொண்டு வருகின்றன.
ஒஹியோவில் உள்ள மருத்துவ மனையில் மூளைச் சாவடைந்த பெண்ணின் முகத்தை மருந்து ஒவ்வாமையால் முகம் சிதைந்த பெண்ணிற்கு மாற்றும் முன்பு கொடையாக பெறப்பட்ட முகத்தை படம் எடுக்கும் காட்சி.