அட மூடநம்பிக்கை கொழுந்துகளே! சட்டமன்றத்திற்குள் காவல்துறையினர் நுழைந்ததால் மாசுபட்டதை நீக்க ‘புனித நீர்’ தெளிப்பாம்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புவனேஸ்வரம், மார்ச்.28- ஒடிசா மாநில சட்டமன்றத்திற்குள் காவல் துறையினர் நுழைந்ததால் ஆன்மிக ரீதியாக மாசு பட்டதாக கூறி, அவைக் குள் பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் புனித நீரை தெளித்தனர்.

சட்டமன்றத்தில் அமளி

ஒடிசா மாநிலத்தில் மேகன் சரண் மாஜி. தலை மையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
கடந்த 18-ஆம் தேதி பேரவை கூடியபோது பல்வேறு பிரச்சினைகளை காங்கிரஸ், பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் எழுப்பினர். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் பெண்களுக்கு எதி ரான குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக கூறி பேரவை யில் எதிர்க்கட்சி எம். எல்.ஏ.க்கள் கடும் அமளி யில் ஈடுபட்டனர்.
அவைக்குள் வந்த காவல்துறையினர்

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை விசாரிக்க ஒரு குழுவை அமைக்கக் கோரி காங்கிரஸ் எம். எல்.ஏ.க்கள், இசைக்கருவிகளை இசைத் தும், பதாகைகளை தூக் கிப்பிடித்தும் போராட்டம் நடத்தினர்.
அவைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி அவர்களை வெளியேற் றும்படி, சட்டப் பேரவை காவல்துறையினருக்கு பேரவைத் தலைவர் சுரமபாதி உத்தரவிட்டார். இதையடுத்து காவல் துறையினர் பேரவைக்குள் வந்து, காங்கிரஸ் எம்.எல். ஏ.க்களை வலுக்கட்டாய மாக வெளியேற்றினர்.

புனித நீர் தெளித்த
எம்.எல்.ஏ.க்கள்

சட்டப் பேரவைக்குள் காவல்துறையினர் வந்த தால், பேரவை ஆன்மிக ரீதியாக மாசுபட்டுள் ளதாக கூறி, பிஜூ ஜனதா தள எம். எல்.ஏ.க்கள், அக்கட்சியின் கொறடா பிரமிளா மல்லிக் தலை மையில், பேரவைக்குள் புனித நீரை தெளித்தனர்.
மாவிலைகளுடன் இருந்த கலசத்தில் இருந்து, சட்டப் பேரவையின் ஒவ்வொரு பகு தியிலும் அவர்கள் புனித நீரை தெளித்தனர் .

பேரவைத் தலைவர் கண்டிப்பு

பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏ.க்களின் இந்த செயலை பேரவைத் தலைவர் சுரம பாதி கண்டித்தார். உறுப் பினர்களின் இந்த செயல் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இவ்வாறு செய் வதை நிறுத்த வேண்டும் என்று கூறினார்.
இதேபோல் வருவாய்த் துறை அமைச்சர் சுரேஷ் பூஜார், ‘இந்த உன்னதமான சட்டப் பேரவையில் புனிதப்படுத்த வேண்டிய அவசிய மில்லை. ஏனெனில் அது எப்போதும் தூய்மை யாகவும், புனிதமாகவும் இருந்து வருகிறது’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *