மும்பை, மார்ச் 28- ஒழுங்குமுறை இணக்கத்தில் குறைபாடுகளுக்காக எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி மீது அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் – (கேஒய்சி) தொடர்பாக ரிசர்வ் வங்கி வழங்கிய சில வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக எச்.டி.எஃப்.சி வங்கிக்கு ரூ.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மற்றொரு அறிக்கையில், ரிசர்வ் வங்கி பஞ்சாப் அண்ட் சிந்து வங்கிக்கு (பி.எஸ்.பி.டி.ஏ) போன்ற சில உத்தரவுகளுக்கு இணங்காததற்காக ரூ.68.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஈவுத் தொகை அறிவிப்பது தொடர்பான சேவை களுக்கு இணங்காததற்காக கேஎல்எம் ஆக்ஸிவா ஃபின்வெஸ்ட் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மின்னணு துறையில்
தமிழ்நாடு படைத்த சாதனை
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
சென்னை, மார்ச் 28- “மின்னணு துறையில், இந்த நிதியாண்டு பிப்ரவரி மாதம் வரை தமிழ்நாடு தேசிய ஏற்றுமதியில் 37 சதவீதத்தை ஏற்றுமதி செய்து பெரும் சாதனை படைத்துள்ளது. இரண்டாம் இடத்தில் கர்நாடகம் 20 சதவீத பங்குடன் உள்ளது. ஆந்திரா 10ஆவது இடத்தில் உள்ளது. 2021இல் 1.86 பில்லியன் அமெரிக்க டாலராக ஆக இருந்த ஏற்றுமதி, திராவிட மாடல் ஆட்சியில் மளமளவென வளர்ந்து, இன்று 12.5 பில்லியன் அமெரிக்க டாலராக தாண்டி உயர்ந்து வருகிறது” – என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.