கோவில்பட்டி, மார்ச் 28- 23.3.2025 அன்று மாலை ஆறுமணிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகர கழக சார்பில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106-ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
செட்டிக்குறிச்சி பெரியார் பெருந் தொண்டர் பொன்.மாரியப்பன் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் மகேந்திரன் வரவேற்று உரையாற்றினார். கழககாப்பாளர் மா.பால் இராசேந்திரம், மாவட்ட கழக தலைவர் மு.முனியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு திமுக உறுப்பினர் பிரியாகுருராஜ் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
கழகதுணைப்பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் கோ.முருகன், மாவட்ட ப.க.தலைவர் வெங்கட்ராமன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் செ.செயா, மாவட்ட தொழிலாளரணி தலைவர் த.நாகராசன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
தொடக்கத்தில் செட்டிக்குறிச்சி தமிழ் சிலம்பு கூட வீரர்களின் சிலம்பாட்டம் நடைபெற்றது.
பங்குபெற்ற 21 வீரர்களுக்கு ஆசிரியர் மகேந்திரன் பரிசளித்து பாராட்டினார். இறுதியில் செட்டிக்குறிச்சி சு.சிவாமகேசுவரி நன்றி கூறினார்.