டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள வக்பு மசோதாவை திரும்ப பெற தீர்மானம்: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்; அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றம்; பாஜக வெளிநடப்பு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 5 விழுக்காடு குறையும் அபாயம் தொகுதி மறுவரையறையை எதிர்த்து தெலுங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்
* தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தெலுங் கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ராகுல் காந்தி பேச வாய்ப்பு மறுக்கப்படும் விவகாரம்: மக்களவைத் தலைவருக்கு 8 கேள்விகள்: நேரில் சந்தித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கடிதம்.
* காங்கிரஸ் தலைவர் கன்னையாவின் வருகைக்குப் பிறகு பீகார் கோயில் ‘கழுவப்பட்டது’, பாஜக அல்லாத ஆதரவாளர்கள் ‘தீண்டத்தகாதவர்களாக’ நடத்தப்படுவார்களா? என காங்கிரஸ் கேள்வி.
* மக்களவையில் துணைத் தலைவர் பதவி இன்னமும் நிரப்பப்படாமல் உள்ளது குறித்து, மக்களவை தலைவருக்கு காங்கிரஸ் கடிதம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங் களுக்கு யுஜிசி விதிமுறைகள் பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
தி டெலிகிராப்:
* நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளத்தை தன் பாதையில் வரவழைக்க, பீகார் அதிகாரிகள் மீது அமலாக்கத்துறையை ஏவியது மோடி அரசு என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மும்மொழி கொள்கை எதிர்ப்பு நீதிக்கான போர்: யோகி ஆதித்யநாத்துக்கு முதலமைச்சர் பதிலடி. உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நமக்கு வெறுப்பு பற்றி பாடம் எடுக்கிறார். எங்களை விட்டுவிடுங்கள். அவர் வெறுப்பு பற்றி பாடம் எடுப்பது நகை முரண். அரசியல் அவல நகைச்சுவை அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்.
– குடந்தை கருணா