கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
14.11.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இந்தியாவின் ஊழல் தலைநகரம் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் என ராகுல் குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குற்றவியல் மசோதாக்கள் பெரும்பாலும் இருக்கும் சட்டங்களின் பெயர்கள் ஹிந்தியில் இருப்பதற்கு, நாடாளு மன்ற குழுவின் உறுப்பினர்கள் எதிர்ப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஈரோடு மாவட்டத்தில் வடமுகம் வெள்ளோடு, செல்லப்பம்பாளையம், செம்மாண்டம்பாளையம், கருக் கன்காட்டு வலசு, புங்கம்பாடி போன்ற கிராமங்கள் கடந்த பல ஆண்டுகளாக பட்டாசு கொளுத்தாமல் தீபாவளி கொண்டாட்டம்.
தி டெலிகிராப்:
* அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கு வங்க கிருஷ்ணாநகர் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக மஹுவா மொய்த்ராவை, மம்தா நியமித்துள்ளார்.
* பீகாரைப் பின்பற்றி ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆந்திராவும் நடத்துகிறது.
* சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நிகழும் நலத் திட்டங்களை முன்வைத்து ராகுல், பிரியங்கா பிரச்சாரம்.
– குடந்தை கருணா