கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
1 Min Read

27.3.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* பெண்களின் உடல் உறுப்புகளை தொடுவது பாலியல் குற்றமில்லையா? உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் , தீர்ப்புக்கு தடை. உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கிய தீர்ப்பு மனிதாபிமானமற்றது. அவர் உணர்ச்சியற்ற நிலையில் இருக்கிறார். நீதிபதிக்கு எதிராக இப்படி தடித்த வார்த்தைகளை பயன்படுத்துவதற்காக நாங்கள் வருந்துகிறோம் என நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி கண்டனம்.
* ஆதாரமற்ற கருத்தைக் கூறுகிறார் மக்களவைத் தலைவர். ஜனநாயக முறையில் மக்களவை நடக்கவில்லை: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* தொகுதி மறுசீரமைப்புக்கு மக்கள் தொகை விதியை மட்டும் பின்பற்றுவது இந்தியாவின் கூட்டாட்சி உணர்வைத் தோற்கடிக்கும் என்கிறார் கட்டுரையாளர் பி.ஆர்.எஸ். கட்சியின் மேனாள்
எம்.பி.வினோத் குமார்.
* பாட்னாவில் வக்ஃப் மசோதாவுக்கு எதிரான போராட்டம்; லாலுபிரசாத், பிரசாந்த் கிஷோர் கலந்து கொண்டு ஆதரவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* பிரதமர் சிறீ திட்டத்தை செயல்படுத்தாததற்காக ஒன்றிய அரசு SSA நிதியை நிறுத்தி வைத்திருப்பது நியாயமற்றது நிலுவையில் உள்ள மொத்த நிதி மேற்கு வங்கத்திற்கு ரூ.1,000 கோடிக்கு அதிகமாகவும், கேரளாவிற்கு ரூ.859.63 கோடியாகவும்,தமிழ்நாட்டிற்கு ரூ.2,152 கோடியாகவும் உள்ளது என்று நாடாளுமன்றக் குழு அறிக்கை வெளியீடு.
தி டெலிகிராப்
*மோடி அரசாங்கம் நடுத்தர வர்க்கத்தை நசுக்கி, இந்தியாவை காலனித்துவத்திற்கு முந்தைய வறுமைக்குத் தள்ளியுள்ளது என மல்லிகார்ஜுன கார்கே காட்டம்.
* மும்மொழி கொள்கை: வட மாநிலங்கள் பள்ளிகளில் தென்னிந்திய மொழிகள் கற்பிக்கப்படவில்லை என்று ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வ பதில்.
– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *