இந்தியாவில் கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கிறது என்பது பெயரளவிற்குத்தான். நடைமுறையில் ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு மட்டுமே உரிமை உடையது என்ற போக்கில் பிஜேபி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
எந்த வகையிலும் மாநில அரசின் கருத்தைக் கேட்பதில்லை. எடுத்தேன் – கவிழ்த்தேன் என்ற முறையில் தான்தோன்றித்தனமாக நடந்து வருகிறது.
புதிய கல்வி என்ற பெயரால் மும்மொழியைத் திணிப்பது – இதை ஏற்றுக் கொண்டால்தான் மாநிலத்திற்குச் சட்டப்படி கொடுக்க வேண்டிய நிதியைத் தருவோம் என்ற இடி அமீன் போக்குத் தொடர்கிறது.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டில் அதுவும் டிரம்ப் இரண்டாவது முறையாகக் குடியரசுத் தலைவராக வந்துள்ள நிலையில் கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து அறவே நீக்கி மாநில அரசுகளிடம் முழுமையாகவே ஒப்படைத்து வி்ட்டார். டிரம்பிடம் கூடிக் குலவும் இந்தியப் பிரதமரின் கவனத்துக்கு இதைக் கொண்டு வருகிறோம்.
அமெரிக்காவில் கல்வித்துறையை மாகாண அரசுகளிடம் மொத்தமாக ஒப்படைக்கும் முடிவை அதிபர் டிரம்ப் எடுக்கிறார். தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக கோரிக்கையாக வைக்கப்படும் இந்தப் பிரச்சினையை அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கே நிறைவேற்ற உள்ளார். இதற்கான அவசர சட்டத்தையும் அவர் கொண்டு வருகிறார்.
இந்தியாவில் கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. அதாவது மாநில மற்றும் ஒன்றிய பிரிவு இரண்டிலும் கல்வி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் கல்வியை முழுக்க முழுக்க மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
நெருக்கடி நிலை காலத்தில் கல்வி இப்படி பொதுப்பட்டியலுக்குச் சென்றது. இதைப் பல்லாண்டுகளாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்த்து வருகின்றன. திமுக, அதிமுக, மற்றும் இடதுசாரிகளும் கல்வியை மாநில பிரி விற்குக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையான இந்தப் பிரச்சினையை அமெரிக்க அதிபராகியிருக்கும் டொனால்ட் டிரம்ப் அந்த நாட்டில் அமல்படுத்த உள்ளார். அதன்படி அமெரிக்காவின் மத்திய கல்வித் துறையை மூட அவர் முடிவு செய்துள்ளார். அனைத்துக் கல்விப் பொறுப்பையும் மாநிலங்களுக்கே வழங்க முடிவு செய்துள்ளார்.
தேசிய அளவில் அங்கே ஒரு கட்சி வென்றால்.. அந்த கட்சிதான் கல்விக் கொள்கையை மாற்றுகிறது. இப்போது உதாரணமாக பைடன் வென்ற போது நாடு முழுக்க கல்வி நிறுவனங்களில் ஜனநாயகக் கட்சிக் கொள்கைகள் கொண்டு செல்லப்பட்டன. இது டிரம்பின் குடியரசு கட்சிக்கு சிக்கலாக அமைந்தது. முக்கியமாக குடியரசு கட்சி வலுவாக இருக்கும் மாநிலங்களில் கூட ஜனநாயகக் கட்சியின் கொள்கைகள் திணிக்கப்பட்டன.
இதை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவின் மத்திய கல்வித் துறையை மூட அவர் முடிவு செய்துள்ளார். அனைத்துக் கல்விப் பொறுப்பையும் மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளார். எதிர்காலத்தில் ஜனநாயக கட்சி வென்றால் கூட.. குடியரசு கட்சி மாநிலங்களில் எந்த விதமான கல்வி ரீதியிலான மாற்றங்களையும் செய்யக்கூடாது என்பதால் டிரம்ப் இந்த முடிவை எடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை தேர்தலின் போதே வாக்குறுதியாக டிரம்ப் அறிவித்து இருந்தார். டிரம்பின் அஜெண்டா47 பிரச்சாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டது.
டிரம்ப்பின் குடியரசுக் கட்சி தற்போது அமெரிக்காவில் வலுவாக உள்ளது. முக்கியமாக ஒரு கவுண்டியில் கூட இந்த முறை கமலா ஹாரிஸ் டிரம்ப்பை விட அதிக வாக்குகளைப் பெறவில்லை.
கல்வியை இனி அய்க்கிய அமெரிக்க அரசு நிர்வாகத்தில் இல்லாமல் மாகாணங்களே நிர்வாகித்துக் கொள்ள உடனடி யாக உத்தர விட் டதை தொடர்ந்து எலன் மாஸ்க் வெளியிட்ட ஏ.அய். கருத்துப் படம் இது.
இந்தியா திருந்துமா? மாநிலங்கள் கண் விழிக்குமா?
அமெரிக்காவில் கல்வி மாநில பட்டியலில் வருகிறது!

Leave a Comment