திருவெறும்பூரில் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி! ‘‘ஏழ்மையிலும், விடாமுயற்சியோடு செயல்பட்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம்!’’

Viduthalai
2 Min Read

தொழில்முனைவோரான இளைஞரின் வீச்சு

திருவெறும்பூர், மார்ச் 26- திருவெறும் பூரில் பெரியார் பேசுகிறார் 6 ஆவது நிகழ்ச்சி, 23.03.2025 அன்று பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. அனைவரையும் பி.அனுராதா வரவேற்றுப் பேசினார்.
‘‘இன்சூரன்ஸ் துறையில் வெற்றி பெற்றது எப்படி?’’, என்கிற தலைப்பில் ஆ.இராஜாராமன் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசும்போது, கடற்கரை மாவட்டமான மீமிசலுக்கு அருகில், கிராமத்தில் பிறந்து வளர்ந்து, தம் தந்தையின் தேநீர்க் கடையில் வேலை செய்து, பிறகு திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வந்து, தம் சகோதரரின் பால் கடையில் பணியாற்றி, போதுமான வருமானம் இன்றி போராட்டமே வாழ்க்கையானதை நினைவு கூர்ந்தார்.

விடாமுயற்சி!

இதற்கிடையில் தனது வாழ்விணைய ரைத் தானே தேர்ந்தெடுத்து (ஜாதி மறுப்புத் திருமணம்), அவர்கள் மூலம் புது உத்வேகம் பெற்றதையும் குறிப்பிட்டார். ஏழ்மையிலும் பல வேலைகள் செய்து விடா முயற்சிகளுக்குப் பிறகு காப்பீட்டு முகவராகப் பணியாற்றியதையும், ஒரே ஒருவரிடம் காப்பீடு பெற ஆகக்கூடிய சிரமங்கள், அலைச்சல்கள், மன உளைச்சல் கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
நமக்கான திட்டமிடலுடன், செயல்பட்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம்!
அதேநேரம் அவற்றை எதிர்கொண்டு, தொடர்ந்து எப்படி முன்னேறினார் என்பதையும் எளிய முறையில் விளக்கினார். இளைஞரான இராஜாராமன் பேசிய பேச்சு மிகச் சிறப்பாக அமைந்தது. இப்போது தனக்குக் கீழ் 300 முகவர்கள் பணியாற்றுவதாகவும், திருவெறும்பூர் வட்டார தொழில் மதிப்பு மட்டும் 7 கோடி என்றும் அவர் சொன்னபோது, பலரும் வியப்படைந்தனர். இன்சூரன்ஸ் மட்டுமின்றி, ஒவ்வொரு தொழிலுக்கும் வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். அவர்களின் பொதுவான மனநிலை, நமக்கான திட்டமிடலுடன், செயல்பட்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம் என்று 30 நிமிடங்கள் அழகுற பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பி.அனுராதா, க.புனிதா, சி.நிர்மலா, அ.தமிழ்க்கவி, அ.அன்புலதா, கரு.புனிதவதி, மு.சேகர், போ.ஜெகதீஸ்வரன், பி.இர.அர செழிலன், சி.வெங்கடேஷ், எஸ்.இராமச்சந்திரன், வை.சிவக்குமார், ச.பாலகங்காதரன், விடு தலை க.கிருட்டிணன், ச.கணேசன், ம.சங்கி லிமுத்து, ஆ.அசோக்குமார், மணிகண்டன், அ.சிவானந்தம், ரெ.குமரவேல், வி.சி.வில்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர் சி.நிர்மலா நன்றி கூற, HAPP ரெ.குமரவேல் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்தார்.
கடந்த 6 மாதங்களாக நடைபெறும் திருவெறும்பூர் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி, மாலை 6 மணிக்குத் தொடங்கி, சரியாக 7.30 மணிக்கு முடியும் வகையில் திட்டமிடப்படுகிறது. இதனால் மகளிர் தோழர்கள் மற்றும் மாணவர்கள் வருகையும் சிறப்பாக இருக்கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *