புதுடில்லி, மார்ச்.26- பி.எம்.சிறீ திட்டத்தில் 33 மாநிலங்களில் 12 ஆயி ரத்து 505 பள்ளிகள் சேர்க்கப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இதில் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காள மாநிலங்கள் கையெ ழுத்திடவில்லை.
கையெழுத்திட்ட மாநிலங்கள்
ஒன்றிய அரசின் நிதி உதவி யுடன் செயல்படுத்தப்படும் பி.எம்.சிறீ பள்ளிகள் திட் டத்தை ஏற்காததால் தமிழ் நாடு அரசுக்கு நிதி உதவி கிடைக்காமல் உள்ளது.
இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவையில் தேசிய வாத காங்கிரஸ் எம்.பி.பஜ்ரங் மனோகர் சன்வான் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம். பி. மிதுன் ரெட்டி ஆகியோர் ‘‘அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பி.எம்.சிறீ. திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ள னவா? அந்த திட்டத்தில் அனுமதிக்கப் பட்ட மொத்த நிதி போன்ற விவரங் களை கேள்விகளாக கேட்டு இருந்தனர்.
இதற்கு ஒன்றிய கல்வித் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி எழுத்துப்பூர்வ மாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
3 மாநிலங்கள் இல்லை
பி.எம்.சிறீ திட்டத்தை செயல்படுத் துவதற்காக கேந் திரிய வித்யாலயா, நவோதயா மற்றும் என்.சி.இ.ஆர்.டி. ஆகியவற்றுடன் இணைந்து மொத்தம் 33 மாநிலங்கள் மற் றும் யூனியன் பிரதேசங்களில் பள்ளிக்கல்வி, எழுத் தறிவுத் துறை ஆகியவையும், கல்வி அமைச்சகமும் கையெழுத் திட்டுள்ளன. இதில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங் காள மாநிலங்கள் இன்னும் கையெழுத்திடவில்லை.
ஏற்ெகனவே உள்ள பள்ளிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன. 33 மாநிலங்கள் மற்றும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, என். சி.இ.ஆர்.டி.யில் மொத்தம் 12,505 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 1,314 தொடக்கப்பள்ளிகள், 3,149 நடுநிலைப்பள்ளிகள், 2,858 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 5,184 மேல்நிலைப்பள்ளிகள் ஆகும்.
விதிகள்
இந்த பள்ளிகள் சொந்த கட்டடத் தில் இருக்க வேண்டும், பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், பள்ளி ஆசிரியர் களுக்கு அடையாள அட்டை போன்ற வற்றை நிறைவு செய் திருக்க வேண்டும் என்பன போன்ற விதிகளின் அடிப்ப டையில் இந்த பள்ளிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றன.
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் அனைத்துக் கூறுகளையும் வெளிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இது அறிவாற்றல் வளர்ச்சி என்று மட்டுமல்லாமல், 21-ஆம் நூற்றாண்டின் முக்கிய திறன்களைக் கொண்ட முழுமையான மற்றும் நல்ல நிலையில் மாணவர்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்து கிறது. இந்த பள்ளிகள் மாணவர்களை அவர்களின் கற்றல் செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ.5691 கோடி
மேலும் மாநில வாரியாக பள்ளிகளின் எண்ணிக்கை விவரமும், நிதியாண்டு வாரி யான நிதி விவரமும் தனியாக அளிக்கப்பட்டு இருந்தன. அதில் 2024-2025-ஆம் ஆண்டு ரூ.5691.48 கோடி நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், இதில் மத்திய அரசின் பங்கு ரூ.3757.89 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பி.எம்.சிறீ திட்டம் மூன்று மாநிலங்கள் புறக்கணிப்பு
Leave a Comment