கடந்த 14 ஆம் தேதி நடந்த ஹோலி என்ற பண்டிகையின் போது வட இந்தியா முழுவதும் பல்வேறு அலங்கோலங்களைக் கண்டது உலகம். மிகவும் மோசமான பாலியல் சீண்டல்கள் தொடர்பாக 4500க்கும் மேற்பட்டவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குஜராத் மாநில வால்சாட் பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் ஹோலி கொண்டாடியவர்கள். வெள்ளைச் சிமெண்ட் எனப்படும் ஒயிட் சிமிண்ட்டை தண்ணீரில் கலந்து ஊற்றி விளையாடி உள்ளார்கள்.
விளைவு அது மெல்ல மெல்ல இறுகி கல்போல் மாறிவிட்டது, முதலில் சுத்தியலால் உடைத்துப் பார்த்தனர் முடியவில்லை. தலையில் உள்ள முடிமற்றும் தோலோடு மிகவும் வலுவாக ஒட்டிக்கொண்டதால் அறுவை சிகிச்சையினால் மட்டுமே எடுக்கமுடியும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
ஆனால், அறுவை சிகிச்சைக்கு பயந்து தானாகவே கழண்டுவிடும் என்று இருந்தவர்களுக்கு தோலோடு ஒட்டிக்கொண்டு வெடிப்பு ஏற்பட்டதால் தோல் கிழிந்து காயம் ஏற்படவே வேறு வழியில்லாமல் அனைவரையும் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்!!!