அசாம் பிஜேபி ஆட்சியில் வினாத்தாள் கசிவு 11ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கவுகாத்தி, மார்ச் 24- வினாத்தாள் கசிவு காரணமாக, அசாம் மாநிலத்தில் 11ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதற்காக கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று மாணவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

காவல்துறையில் புகார்

அசாம் மாநிலத்தில், ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு மாநில பாடத்திட்டத்தின் 11ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த 6ஆம் தேதி தொடங்கின. 29ஆம் தேதி வரை நடைபெற இருந்தன. இதற் கிடையே, கடந்த 21ஆம் தேதி கணித தேர்வு நடக்க இருந்தது. ஆனால், அதற்கு முந்தைய நாளிலேயே வினாத்தாள் கசிந்து விட்டது. இதைத் தொடர்ந்து, கணித தேர்வு ரத்து செய்யப்பட்டது. காவல் துறையிலும் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (24.3.2025) முதல், 29ஆம் தேதி வரை நடக்க உள்ள 11ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டுள்ளன. இதுகுறித்து அசாம் மாநில கல்வி அமைச்சர் ரனோஜ் பேகு தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

வினாத்தாள் கசிவு மற்றும் விதிமீறல் காரணமாக, மீதியுள்ள 11ஆம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட் டுள்ளன. புதிய தேர்வு அட்டவணை குறித்து 24ஆம் தேதி நடக்கும் மாநில பள்ளி கல்வி வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாணவர் சேர்க்கைக்கு தடை

மற்றொரு பதிவில், கல்வி அமைச்சர் ரனோஜ் பேகு கூறியிருப் பதாவது:-
மாநிலம் முழுவதும் 3 அரசு பள்ளிகள் உள்பட 18 பள்ளிகள், கணித தேர்வுக்கு முந்தைய நாளிலேயே வினாத்தாள் பாதுகாப்பு சீலை அகற்றிவிட்டன. இதனால் வினாத்தாள் கசிந்தது.

சீலை அகற்றிய 15- தனியார் பள்ளிகளின் இணைப்பு தற் காலிகமாக ரத்து செய்யப் பட்டுள்ளது. அந்த பள்ளிகளில், வருகிற கல்வி ஆண்டில் மாண வர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீதி 3 அரசு பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பதவி விலக கோரிக்கை

இதற்கிடையே, வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மாநில கல்வி அமைச்சர் ரனோஜ் பேகு பதவி வலிக வேண்டும் என்று இந்திய தேசிய மாணவர் சங்கம், இந்திய மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும், மாநில பள்ளிகல்வி வாரிய தலைவர் ஆர்.சி. ஜெயினை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *