வல்லம், மார்ச் 23- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மய்யமும் இணைந்து நீர் மற்றும் வேளாண்மை என்ற தலைப்பில் அறிவியல் மற்றும் பொறியியல் பயிலும் மாணவர் களுக்கு (“TNWISE 2025”) ஹேக்கத்தான் 21.3.2025 அன்று நடைபெற்றது. தமிழ் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் இருந்து சுமார் 338 அணிகள் பங்கேற்றன.
செயின்ட் சேவியர் கத்தோலிக்க பொறியில் கல்லூரி, காவேரி மகளிர் கல்லூரி கொங்குநாடு மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பிரான்சிஸ் சேவியர் பொறியில் கல்லூரி, சிறீஈஸ்வர் பொறியியல் கல்லூரி, தேசிய பொறியில் கல்லூரி, புனித கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சி கே.சி.ஜி கல்லூரி, ஈ.ஆர்.பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி, அரிஃபா அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம் ஆகியவற்றுக்கான 14 கருப்பொருள்களுக்கு தலா ரூ.10,000 மதிப்புள்ள பரிசினை வென்றனர்.
2 கருப்பொருள்கள் ரூ.10,000/- மதிப்புள்ள நான்காம் பரிசினை வென்றனர். 30.000-/ தலா கே.ஜி.அய்.எஸ்.எல் கல்லூரி மற்றம் சாய் ராம் பொறியியல் கல்லூரியும், ரூ 50.000./- மதிப்புள்ள இரண்டாம் பரிசை வென்ற 2 கருப்பொருள்கள் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியும் பெற்றன.
ரூ 1,00.000./- மதிப்புள்ள முதல் பரிசினை வென்ற 2 கருப் பொருள்கள் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கோயம் புத்தூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியும் பெற்றன.
வேளாண்மையில் தர கண்காணிப்பு, சோதனை, உள்கட்டமைப்பு, விநியோக அமைப்புகள் கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நிலையான நீர் மேலாண்மையில் சமூகப் பொறுப்பின் பங்கு தொடர்பான சிக்கல் அறிக்கைகள் குறித்து நிபுணர்களும் பங்கேற்பாளர்களும் விவாதித்தினர்.
காலநிலை ஸ்மார்ட் விவசாயம்
மனித நல்வாழ்வில் உணவுப் பாதுகாப்பின் அத்தியாவசியம் பற்றி மாணவர்கள் கூறினர். இந் நிகழ்ச்சியில் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை விநியோகச் சங்கிலி தளவாடங்கள், நகர்ப்புற விவசாயம், கழிவுகளைக் குறைத்தல் மற்றும் செங்குத்து விவசாயம் ஆகியவற்றில் உள்ள சவால்களையும் ஆராய்ந்து காலநிலை ஸ்மார்ட் விவசாயம், கள நடவடிக்கைகளில் ட்ரோன் பயன்பாடு மற்றும் மீன்வளத்தில் ஸ்மார்ட் தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு போன்ற வளர்ந்து வரும் நுட்பங்களை பங்கேற்பாளர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த நிகழ்வில் ஜெனரல் இசட் போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களின் எதிர்கால யோசனைகள் அதிநவீன மற்றும் வளரும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது. நீர் மற்றும் விவசாயத் துறைகளில் வளர்ந்து வரும் சவால்களுக்கு நிலையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட அவர்களின் புதுமையான அணுகுமுறைகளாக இருந்தன.
செயற்கை நுண்ணறிவு
ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் குழு மனித விண்வெளி விமான மற்றும் என்.எல்.சி. போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் தொழில்துறைத் தலைவர்கள் ஸ்டீம் ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். நீர் மற்றும் விவசாயத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பாலின பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை விவாதங்கள் அடிக்கோடிட்டுக் காட்டின.
திறமையான
சுற்றுச்சூழல் அமைப்பு
நீர் மற்றும் விவசாய மேம்பாட் டிற்கான நிலையான மற்றும் திறமையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க புதுமை, தொழில்நுட்பம் மற்றும் உள்ளடக்கிய பங்கேற்பைப் பயன்படுத்துவதற்கான நம்பிக்கையான கண்ணோட்டத் துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
இந்த நிகழ்வை பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பக செயல் அலுவலர் பேரா அருணா மற்றும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையம் (TNWIST)ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்தன. மேலும் சிறந்த எதிர்காலத்திற்கான ஆராய்ச்சி, தொழில் மற்றும் சமூகப் பொறுப்புக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் இதுபோன்ற முயற்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.