புதுடில்லி, மார்ச் 23- தொகுதி மறுசீரமைப்பு செய்ய ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது.
இதனால் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதி களின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழ் நாட்டுக்கு ஒரு தொகுதி கூட குறையாது என அமித்ஷா பேசியிருந்தார்.
எனினும், தமிழ் நாட்டுக்கு தொகுதிகள் குறையாமல் வட மாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரித்தால், அதுவும் அநீதியே என திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப் படையில் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பிய திமுக எம்.பி சண்முகம் கூறியதாவது:-
மக்களவையின் பலம் அதிகரிக்கப்பட்டால் பங்களிப்பு உள்ளிட்ட வற்றை கணக்கில் கொள்ளும் விகிதாச்சார அடிப்படையில் இதை மேற்கொள்ள வேண்டும்.
மக்களவை தொகுதி களை நிர்ணயிக்கும் மக்கள் தொகை எண்ணிக்கை என்பது குறைந்தபட்சம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு 1971 கணக்கெடுப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும்.
மக்கள் தொகை கட்டுப் பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தென் மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிக்கிறது” என்றார்.