“மழையைப் போல் வெயிலையும் பேரிடர் பட்டியலில் சேர்க்க வேண்டும்’’ நாடாளுமன்ற குழு பரிந்துரை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 22 மழையைப் போலவே வெயிலையும் பேரிடர் பட்டியலில் சேர்த்து விடுங்கள் என்று ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் குரல்கள் எதிரொலிக்க துவங்கியுள்ளது.

கடந்த சில ஆண்டு களாகவே கோடைக் காலங்களில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெயிலை பேரிடர் மேலாண்மைத் திட்டங்களில், வெப்ப அலைகள் போன்ற “புதிய மற்றும் வளர்ந்து வரும்” பேரிடர்களை ஒன்றிய அரசு சேர்க்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக உள்துறைக்கான நாடாளு மன்ற நிலைக்குழு கடந்த வாரம் மாநிலங் களவையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

பேரிடர் பட்டியல்

அதில் வெயில் தாக்கத்தை பேரிடர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசுக்கு பரிந் துரைத்தது. அதன்படி, ‘அரசின் புதிய மற்றும் அதிகரித்து வரும் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் வெப்ப அலையின் தாக்கம் இவைகளை சேர்க்க இந்த குழு பரிந் துரைக்கிறது. பேரிடர் மேலாண்மை சட்டம் பொருத்தமானதாகவும், வளர்ந்து வரும் பேரிடர் அபாயங்களுக்கு ஏற்பவும் இருப்பதை உறுதிசெய்ய, வல்லுனர்கள் மற்றும் அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து, பேரிடர் பட்டியலை அவ்வப் போது மதிப்பாய்வு செய்து புதுப்பிப்ப தற்கான வழி முறையையும் நிறுவ வேண்டும்’ என கூறப்பட் டுள்ளது.

சேதங்களை குறைக்க வும், விரைவாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மருத்துவமனைகள், பள்ளிகள் இவைகளில் பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்புகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளில் அதிக முதலீடு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் பா.ஜகவின் மாநிங்களவை உறுப்பினர் ராதா மோகன் தாஸ் அகர்வால் தலைமையிலான 31 பேர் கொண்ட நீண்டகால பேரிடர் தயார்நிலை குறித்து ஆய்வு செய்து திட்டமிடும்படி ஒன்றிய அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *