மேலவன்னிப்பட்டு, மார்ச் 22 அறி வுலக மேதை தத்துவ தலைவர் தந்தை பெரியாரை வாழவைத்து பின் கழகத்தை காத்த அன்னை மணியம்மையாரின் நினைவு நாள் பொதுக்கூட்டம் மேலவன்னிப்பட்டில் 16.03.2025 அன்று மாலை 6.30 மணிக்கு உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன் தலைமையிலும், பெரியார் வீர விளை யாட்டு கழக மாநில செயலாளர் ந. இராமகிருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம், ஊராட்சி மன்ற மேனாள் தலைவர்
சு. தினகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அனைவரையும் வரவேற்று தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ. ரஞ்சித்குமார் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தந்தை பெரியார் சிலை மற்றும் அன்னை மணியம்மையார் படத்திற்கு ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் சு. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
முன்னிலை வகித்து சிறப்பித்த உரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம், பெரியார் வீர விளை யாட்டு கழக மாநில செயலாளர் ராம கிருஷ்ணன், ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் சு.தினகரன், பொறியாளர் பாலகிருஷ்ணன், தலைமை வகித்த தெற்கு ஒன்றிய தலைவர் த. ஜெகநாதன் ஆகியோர் உரையாற்றினார்கள். தலைமை கழக பேச்சளார் மன்னன் இராம. அன்பழகன் சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட இணை செயலாளர் அ.லட்சுமணன், தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் மா. மதியழகன், ஒக்கநாடு மேலையூர் திராவிடர் கழக கிளை கழக செயலாளர் வீரத்தமிழன், துரை. தன்மானம், இளைஞரணி தோழர்கள் கலைவாணன், ரமேஷ், மேலவன்னிப்பட்டு தோழர்கள் அர்ச்சுனன், அஜித்குமார், தேவேந்தி ரன், பிரபு, ஆசைத்தம்பி, செந்தில், திமுக பொறுப்பாளர்கள் ராஜகோபால், வீரமணி, அதிமுக பொறுப்பாளர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் கண்ணன், கர்ணன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ், கீழவன்னிப்பட்டு கோவிந்தராஜ் அம்மையன்பட்டி குருமூர்த்தி மற்றும் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். வருகை தந்த சிறப்பித்த, சிறப்பு விருந்தி னர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. அனைவருக்கும் இளைஞரணி தோழர் அர்ச்சுனன் நன்றி கூறினார்.
தந்தை பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நூலகத்திற்கு மேலவன்னிப்பட்டு திராவிடர் கழகத்தின் சார்பில் வர்ணம் அடிக்கப்பட்டு, மின்விளக்குகள் புதிதாக போடப்பட்டது. அனைவருக்கும் கழக தோழர் ரஞ்சித்குமார் சிற்றுண்டி வழங்கினார்.