சுனிதா வில்லியம்சின் பயணம் அறிவியலின் வெற்றியும் ஸநாதனத்தின் வீழ்ச்சியும்

viduthalai
2 Min Read

சாஸ்திரங்களின்படி, மஹாவிஷ்ணு பல அண்டங்களை உருவாக்குகிறார், ஒவ்வொரு அண்டத்திற்கும் பல லோகங்கள் உள்ளன.

நாம் வசிக்கும் அண்டம் இப்போது 14 லோகங்களைக் கொண்டுள்ளது. நமது பூ லோகத்திற்கு மேலே 6 & பூ லோகத்திற்கு கீழே 7. அவை பின்வருமாறு:

புவர்லோகம், ஸ்வர்லோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபோலோகம், சத்யலோகம் – இந்த 6 பூ லோகத்திற்கு மேல். சத்ய லோகத்திற்கு மேலே பிரம்ம லோகம், விஷ்ணு லோகம் மற்றும் சிவ லோகம் உள்ளன, அங்கு ஞானம் பெற்றவர்கள், தெய்வீக மனிதர்கள் மற்றும் குருக்கள்மட்டுமே நுழைய முடியும்.

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இத்தனை நாள் வலம் வந்தது எந்த லோகம் ஓய்?

அவரை அழைத்து வர 6 + 3 லோகத்தில் இருந்து ஒரே ஒருத்தர் கூடவா வரவில்லை? எப்போதும் எல்லா லோகத்திற்கும் விண்வெளிக் கவச உடையின்றி, கதிர்வீச்சு அலைகளை எதிர்கொண்டு கடுங்குளிர் மற்றும் மணித்துளியில் உடலை ஆவியாக்கும் வெப்பத்தில் கூட நாராயணா, நாராயணா என்று கூவிக்கொண்டு திரியும் ‘நாரதர்’ கண்ணில் கூடவா சுனிதாவில்லியம்ஸ் படவில்லை.
சிவன், விஷ்ணு, பிரம்மன் இவர்களின் மனைவிமார்கள், பிள்ளைக்குட்டிகள், உதவியாளர்கள் யார்கண்ணிலும் சுனிதா வில்லியம்ஸ் படவில்லை..?

ஏன் படவில்லை. அப்படி இருந்தால் தானே படமுடியும். நம்மை முட்டாளாக்க, அடிமைப்படுத்த எழுதப்பட்ட, ஆரிய பார்ப்பன கற்பனைகதைகள் அவை என்பதை தந்தை பெரியார் ஒருவர் நமக்கு உறைக்கும் வகையில் எடுத்துச் சொல்லி உள்ளார். கடைசியில், சுனிதா வில்லியம்சை அறிவியல் தான் போராடி காப்பாற்றி உள்ளது.

இந்தியா, ஞாயிறு மலர்

அதுசரி சுனிதா வில்லியம்ஸ் பூமியை வந்தடைந்த அதே நாளில் மோடி என்ன செய்துகொண்டு இருந்தார்?

அமெரிக்க உளவுத்துறை தலைவரும் இந்திய வம்சாவளிப் பெண்ணுமான துள்சி கபாட்டிற்கு கும்பமேளாவில் சேகரித்த நீரை வெள்ளிச்சொம்பில் கொடுத்தார் பிரதமர் மோடி.
மோடி துள்சி கபார்ட்டிடம் இது அவர்களின் கணக்குப்படி 60 கோடி மக்கள் குளித்த நீர் என்று சொல்லிக் கொடுத்திருப்பாரா?

குறைந்த பட்சம் அந்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த அந்த???? அறிக்கையின் காப்பியையும் சேர்த்தே கொடுத்திருப்பாரா??

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *