ராய்ச்சூர், மார்ச் 21 ராய்ச்சூர் மாவட்டம், சிரவாரா தாலுகாவின் கல்லுாரில் மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்க ளில் இருந்தும், தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருவர். காணிக்கையும் அதிகம் வசூலாகுமாம்.
இக்கோவில் அர்ச்சகர் கடந்த 19.3.2025 அன்றிரவு, வழக்கம் போன்று பூஜையை முடித்த பின், நடையை சாத்தி விட்டு, வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர், பூட்டை உடைத்து கோவிலுக்குள் நுழைந்தனர்.
25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள…
80 கிராம் எடையுள்ள வெங்கடே சுவர சாமியின் கிரீடம், 30 கிராம் எடையுள்ள லட்சுமி கிரீடம், 140 ரூபாய் மதிப்புள்ள பாதங்கள் உள்பட 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிக் கொண்டு அக்கும்பல் தப்பியது.
மறுநாள் பூஜை செய்ய, அர்ச்சகர் கோவிலுக்கு வந்த போது, திருட்டு நடந்திருப்பதைப் பார்த்து, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த சிரவாரா காவல்துறையினர், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
கோவிலில், அதிக அளவில் தங்க நகைகள் இருப்பது தெரிந்தும், பாதுகாப்பு ஊழியர் நிய மிக்கப்படவில்லை. குறைந்தபட்சம் கண்காணிப்பு கேமராவும் பொருத்த வில்லை.
இதை நோட்டம் விட்டு, மர்ம கும்பல் திருட்டில் ஈடுபட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருடர்களைக் கண்டுபிடித்து, நகைகளை மீட்கும்படி காவல்துறையினரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
கடவுள் சக்தி இதுதானா? மகாலட்சுமி கோவிலில் ரூ.25 லட்சம் நகை திருட்டு!

Leave a Comment