பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜி.சவுந்தரராஜன் காஞ்சிபுரத்தில் கழகத் தலைவர் ஆசிரியரிடம் ரூ.2,000 வழங்கினார்.
– – – – –
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு-நே.சொர்ணம் இணையர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இணை ஏற்பு ஏற்ற 33ஆம் ஆண்டு தொடக்க நாள் (20.03.2025) மகிழ்வாக, விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ 1000 நன்கொடையாக அளிக்கப்பட்டது.
– – – – –
பெரியார் பற்றாளர் காட்பாடி இராசுமணி தனது 89-ஆம் ஆண்டு பிறந்த நாள் (20.03.2025) மகிழ்வாக விடுதலை ஆண்டுச் சந்தா ரூ.2000 உண்மை ஆண்டுச் சந்தா ரூ.900 மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ. 1100 என மொத்தம் ரூ.4 ஆயிரத்தை தாம்பரம் சீ. இலட்சுமிபதி மூலமாக வழங்கினார்.
– – – – –
அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபனின் தந்தை இராமமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (20.3.2025) நாகம்மை குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 2000 நன்கொடையினை தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வனிடம் வழங்கினார்.