தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில், நேற்று ஒரே நாளில் 9,100 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டு மாணவர் சேர்க்கை, மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆர்வத்துடன் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இதுவரை 12 வேலை நாள்களில் மொத்தம் 81,797 பேர் அரசுப் பள்ளி களில் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித் துள்ளது.