சென்னை, மார்ச் 19 சென்னை எழும்பூர் அருங் காட்சியக வளாகத்தில் திராவிட நாகரிகத்தினை உலகிற்கு அறிமுகப்படுத்திய பிரிட்டிஷ் இந்தியாவின் அகழ்வாராய்வுத்துறை இயக்கு நராக இருந்த ஜெனரல் சர். ஜான்மார்ஷல் அவர்களின் பிறந்தநாளில் அவரது சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழும்பூர் அருங் காட்சியக வளாகத்தில் இன்று (19.3.2025) திறந்து வைத்தார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்ட சமூகவலைதளப் பதிவில், ஹிந்து சமவெளி நாகரிகத்தை உலகிற்குக் கண்டுபிடித்து அறி வித்த சர் ஜான் மார்ஷல், இந்திய தொல்லியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்தார். அவரது கண்டுபிடிப்பு, சமஸ்கிருதம் எல்லாவற்றிற்கும் அடித்தளம் என்ற தவறான கருத்தை உடைத்து, திராவிட கருதுகோளுக்கு வழிவகுத்தது, இது பண்டைய இந்திய துணைக் கண்டத்தைப் பற்றிய நமது புரிதலை என்றென்றும் மறு வடிவமைத்தது. அவர் நமது நிலத்தின் உண்மையான வரலாற்றை கண்டறிவதற்காக போட்ட பாதையை நாம் தொடர்ந்து வலுப்படுத்தி முன்னேற்றுவோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.