நாக்பூர், மார்ச் 19- நாக்பூ ரில், முகலாயப் பேரரசர் அவரங்க சீப்பின் கல்லறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது இசுலாமி யர்களின் புனித நூல் எரிப்பதாக வதந்தி பரவியதால் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராட்டிர மாநிலம் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்று வலதுசாரி அமைப்பினர் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்தவர் கள் மாநிலம் முழுவதும் 17.3.2025 அன்று போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இந்நிலையில், நாக்பூர் பகுதியில் போராட்டம் நடத்து பவர்கள் இசுலாமியர்களின் புனித நூலை எரிப்பதாக தகவல் பரவிய நிலையில், போராட்டத்துக்கு இசுலாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறிய நிலையில், சாலையில் இருந்த வாகனங்களுக்கு போராட் டக்காரர்கள் தீவைத்துள்ளனர்.
வன்முறை கும்பலை காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தி கலைத்தனர். இந்த வன்முறை சம்பவத்தில் 15 காவல் துறையினர் உள்பட 20 பேர் காயமடைந்ததாகவும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ரவீந்தர் சிங்கால் தெரிவித்துள்ளார். மறு அறிவிப்பு வரும் வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
கோட்வாலி, கணேஷ்பேட், லகட்கஞ்ச், பச்பாவ்லி, சாந்திநகர், சக்கர்தாரா, நந் தன்வன், இமாம்வாடா, யசோ தரா நகர் மற்றும் கபில்நகர் காவல் நிலையங்களின் எல் லைக் குட்பட்ட பகுதிகளில் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரநிலைகளைத் தவிர, தனிநபர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே நடமாடுவதை இந்த உத்தரவு தடை செய்கிறது.
இதனை மீறுபவர்கள் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 223-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப் படுவார்கள் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஒன்றிய அமைச்சரும் நாக்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான நிதின் கட்கரி ஆகியோர் மக்கள் அமைதியையும் நல்லிணக் கத்தையும் பேணுமாறு வலியுறுத் தினர்.
ஊரடங்கு உத்தரவில் காவல் துறையினர், அரசு அதிகாரிகள், அத்தியாவசிய சேவை வழங் குநர்கள், தீயணைப்புப் படையினர் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிலைமை உன்னிப்பாகக் கண் காணிக்கப்பட்டு வருவதாகவும், இயல்புநிலையை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை உறுதியளித்துள்ளது.