கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் மோடி செல்லாத நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் 22ஆம் தேதி மணிப்பூர் பயணம்

viduthalai
2 Min Read

புதுடில்லி, மார்ச் 19 கலவர பகுதியை நேரில் சென்று பிரதமர் மோடி பார்வை யிட வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தன. இருப்பினும் அவர் அங்கு செல்லவில்லை.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இந்த கலவரத்தில் இதுவரை 250-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

குடியரசு தலைவர் ஆட்சி

மேலும் வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை விட்டுவிட்டு பல மாதங் களாக நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனிடையே மணிப்பூர் முதலமைச் சராக இருந்து வந்த பைரேன் சிங் கடந்த மாதம் தனது பதவி விலகியதை தொடர்ந்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் பி.ஆர்.கவாய் உள்பட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் வருகிற 22-ஆம் தேதி மணிப்பூர் செல்ல இருப்பதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:-

நீதிபதிகள்
மணிப்பூர் பயணம்

“மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் 20-ஆம் ஆண்டு விழாவையொட்டி உச்சநீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவருமான பி.ஆர்.கவாய், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோருடன் வருகிற 22-ஆம் தேதி மணிப்பூருக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது நீதிபதிகள் 6 பேரும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்வார்கள்.

நீதிபதிகளின் இந்த வருகை பாதிக் கப்பட்ட மக்களுக்கான சட்ட மற்றும் மனிதாபிமான உதவியின் தற்போதைய தேவையை வலியுறுத்தும். இந்த பயணத்தின்போது இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மற்றும் உக்ருல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்ட உதவி மய்யங்களையும், மாநிலம் முழுவதும் உள்ள சட்ட சேவை முகாம்கள் மற்றும் மருத்துவ முகாம் களையும் நீதிபதி கவாய் தொடங்கி வைப்பார்.

தொடரும் வன்முறைகளுக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி மற்றும் ஆதரவை வழங்குவதில் மணிப்பூர் மாநில சட்ட சேவைகள் ஆணையத்துடன் தேசிய சட்ட சேவைகள் ஆணையம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப் பிடத்தக்கது.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *