ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டமும் (PATCA), ஆஸ்திரேலியாவில் ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிரான சமூகங்களும் ஒருங்கிணைத்த பன்னாட்டு மகளிர் நாள் கொண்டாட்டமும், ஜாதிவெறிக்கு எதிரான பணிகளை முன்னிறுத்துகின்ற இந்த நிகழ்ச்சியும் ஊக்கமளிக்கும் வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஆஸ்திரேலியாவில் ஜாதிப் பாகுபாடு கடைப்பிடிக்கப் படுகிறது என்பதையே நான் அறிந்தேன்.
அது என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மேற்கு சிட்னியில் உள்ள வென்ட்வொர்த்வில் சமூகக்கூடத்தில் 130 க்கும் மேற்பட்டோர் கூடி இருக்கைகள் நிறைந்து அமர இடமின்றி பலர் நின்று கொண்டிருக்கின்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்களான டாக்டர் வீரமணி, மற்றும் திருமிகு அருள்மொழி ஆகியோரின் உரைகள் இந்தக் கூட்டத்தின் சிறப்பம்சமாகும்.
ஆஸ்திரேலிய வழக்குரைஞரும், பல்கலைக்கழக விரிவுரையாளரும், ஆஸ்திரேலிய தொழிற்கட்சி செயற்பாட்டாளருமான துர்கா ஓவன் அவர்கள் மோடியின் வலதுசாரி இந்து தீவிரவாதத்தைப் பற்றியும், இந்தியாவில் நடைபெறும் சட்டத்திற்குப் புறம்பான ஜாதி வெறி குறித்தும் பேசினார்.
ஜாதியவெறி மற்றும் அதனுடன் தொடர்புடைய தீவிர வலதுசாரி தீவிரவாதத்தை அம்பலப்படுத்துமவதில் PATCA, சில குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது.
ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையம் ஜாதியத்தை இனவெறியின் ஒரு வடிவமாக ஏற்றுக் கொண்டதிலும், மேற்கத்திய உலகில் ஜாதியப் பாகுபாட்டு எதிர்ப்புக் கொள்கையை அங்கீகரித்த முதல் மாநிலமாக குயின்ஸ்லாந்து மாறியதிலும், PATCAவின் பங்கு குறிப்பிடத்தகுந்தது.
– ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கார் சிந்தனை வட்டத்தைப் பாராட்டி
மேனாள் ஆஸ்திரேலிய செனட் உறுப்பினர் லீ ரியானான் அவர்களின் பதிவு .