சென்னை, மார்ச் 18 தோ்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்தல் விதி மீறல்
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு அரியலூா் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் பகுதியில் திமுகவினா் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, தற்போதைய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சரான சிவசங்கா் உள்ளிட்டோா் மீது அரியலூா் காவல்துறையினர் இரு வழக்குகளைப் பதிவு செய்திருந்தனா்.
இதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற மக்கள வைத் தோ்தல் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரச்சாரம் செய்ததாக அமைச்சா் சிவசங்கா் மீது தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்குகள் ரத்து
அரியலூா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி அமைச்சா் சிவசங்கா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் விதிமுறைகளை மீறியதாக அமைச்சா் பெரியகருப்பன் மீது சிவகங்கை மாவட்டம் கண்டவராயன்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனா். தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சா் பெரிய கருப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நேற்று (17.3.2025) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் ஆகியோா் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
திருவள்ளூர் – திருத்தணியில்
மாற்றுத் திறனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
திருவள்ளூர், மார்ச் 18 திருவள்ளூர் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப் படும் பல வித மான உதவித் திட்டங்கள் மற்றும் அவர்களது உரிமைகள் குறித்தான விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிக ள் திருவள்ளூரில் நேற்று (17.3.2025) நடைபெற்றன.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சிகள், திருவள்ளூர் புத்தகதிருவிழா வளாகம், திருத்தணி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்றன.
தெரு முனை நாடகங்கள்,கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் சகிதம் நடைபெற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மூலம் தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள், அவர்களது உரிமைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார்,மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன்,முட நீக்கியல் வல்லுநர் பிரிதா,மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா, மாவட்ட நூலகஅலுவலர் சரஸ்வதி உள்ளிட் டோர்பங்கேற்றனர்.