பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் பாராட்டு!
சென்னை, மார்ச் 18 – தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை சமூக நலனையும் சமுதாய வளர்ச்சியையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில் பாராட்டியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர்ஜோதி சிவஞானம் கூறியதாவது.
ஒன்றிய அரசின் பொறுப்பு
விலைவாசி உயர்வையைப் பொறுத்த வரை இது மாநில அரசின் பொறுப்பு அல்ல. ஒன்றிய அரசின் பொறுப்பு. ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பது அடுத்து விலைவாசியை கட்டுக்குள் வைப்பது. வளர்ச்சிக்கு நிதி அமைச்சகம் பொறுப்பு விலை வாசியை கட்டுக்குள் வைப்பது ஆர்.பி.அய். பொறுப்பு. அவர்கள் ஏடாகூடமாக செய்து கொண்டு இருக்கிறார்கள். இது தமிழ்நாடு அரசின் பொறுப்பு இல்லை. தமிழ் நாடு அரசு பொருளாதாரத்தில் ஓரளவு உயர்ந்து இருப்பதற்கு காரணம் இங்கு உற்பத்தி அதிகரித்து இருக்கிறது. ஜி.எஸ்.டி.பி.யை அதிகப்படுத்தி இருக்கிறோம்.
பட்ஜெட்டைப் பொறுத்தவரை எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது கடன் அதிகமாகிவிட்டது என்பது. அப்படி பார்க்கவே கூடாது. கடன் நாம் அதிகமாக வாங்கவே முடியாது. நமக்கு நிதித் துறை ஒரு சீலிங் வைத்து இருப்பார்கள். எப்.ஆர்.பி.எம். என்ற ஒரு ஆக்ட் இருக்கு. இந்த ஆக்ட்டுக்கு மேலே கட்டுக் கடங்காமல் கடன் வாங்குவது ஒன்றிய அரசுதான்.
கடன் என்பது கிரைம் இல்லை
இந்தச் சட்டத்தின்படி ஒன்றிய அரசு 40 சதவிகிதம் தான் கடன் வாங்கலாம். இன்றைக்கு ஒன்றிய அரசு 60 சதவிகிதம் கடன் வைத்து இருக்கிறது.
அதே மாதிரி மாநில அரசுக்கு 15ஆவது கமிஷன் சொன்ன சீலிங் இந்த ஆண்டிற்கு 28.7 சதவிகிதம். ஜி.எஸ்.டி.பி.யில் நமது வருமானத்தில் 28.7 சதவிகிதம் கடன் வாங்கலாம். நமது கடன் 26.07 சதவிகிதம் தான் இருக்கிறது. அதனையும் குறைத்து இருக்கிறார்கள். கடன் என்பது ஒரு கிரைம் இல்லை. வளர்ச்சித் திட்டங்கள் தான். இன்றைக்குநான் சொன்னேனே 4.5 இலட்சம் கோடி ரூபாய் நமது பட்ஜெட் . அந்த பட்ஜெட்டில் இந்தத் திட்டங்கள் எல்லாம் 55 லிருந்து 60 சதவிகிதம் இந்தச் செலவுகள் எல்லாம் கல்வி, சுகாதாரம், பெண்கள் நலன், ஊரக வளர்ச்சி நகர்ப்புற வளர்ச்சி, கட்டுமானத் திட்டங்கள் இப்படி 60 சதவிகிதம் நாம் செலவு செய்கிறோம். ஒன்றிய அரசோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.கடந்த பத்து ஆண்டுகாலமாக தொடர்ந்து கல்விக்கு குறைத்துக் கொண்டு வருகிறார்கள். புதிய கல்விக் கொள்கையின் ஒட்டுமொத்த நோக்கமே கல்வியில் 40, 50 சதவிகிதம் ஆக்குவதுதான். அதனை நாம் ஏற்ெகனவே எட்டிவிட்டோம். இது குறித்து சமர்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை என்ன சொல்கிறது என்றால் இதனை இந்தியாவோடு ஒப்பிடத்தேவையில்லை தமிழ் நாட்டை வெளி நாட்டோடுதான் ஒப்பிட வேண்டும்.
மூன்று மடங்கு வளர்ச்சி?
பொருளாதார ஆய்வறிக்கையைப் பார்த்தால் ஒட்டுமொத்தமாக இவை எல்லாமே நாம் ஒரு டிரில்லியன் டாலர் எட்ட வேண்டும் என்பது அதற்கு நாம் மூன்று மடங்கு வளர்ச்சி அடைய வேண்டும். இப்போதுஇருக்கின்றது மாதிரி மூன்று மடங்கு வளர்ச்சியை நாம் அதிகப்படுத்திட வேண்டும். அதனை அதிகப்படுத்தத்தான் இத்தனையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். சென்னைக்கருகில் சேட்டிலைட் நகரம் செய்யப்போகிறோம் என்று பட்ஜெட்டில் சொல்லி இருக்கிறார்கள். இவை எல்லாமே –நமது அணுகுமுறை நமது வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கும் அதே சமயம் நம் சமூக நலத்திலும் மற்றதிலும் நாம் எல்லாவற்றிலும் உள்ளடக்கி இருக்கிற ஒரு வளர்ச்சியை அடைந்து இருக்கிறோம்.
வருவாய் பெருக்கம்
சமூகத்தில் கவனம் செலுத்துவ தினால் தான் இன்றைக்கு பொருளாதார வளர்ச்சி நமக்கு கை கொடுக்கிறது. அது வருவாய் பெருக்கத்திற்கும் உதவுகிறது. இவையெல்லாம் தான் நோக்கமாக வைத்து திட்டமிட்டு இருக்கி றார்கள். நூறு நாள் வேலைதிட்டத்தில் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றாலும் தமிழ்நாடு அரசு அதற்காக நிதி ஒதுக்கி இருக்கிறது. கல்விக்கும், 100 நாள் வேலை திட்டத்துக்கும் அரசியல் காரணத்தால் ஒன்றிய அரசு நிதி ஒதுக்காத போதும் இந்த பட்ஜெட்டில், கல்விக்கும் 100 நாள் வேலை திட்டத்திற்கு முக்கியத்துவம் தந்து அதற்கான நிதியையும் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கருத்துத் தெரிவித் துள்ளார்.