சுயமரியாதைக்காரர்கள் பொதுவாக மனித சமுதாயத்திற்கும், சமூக சமத்துவ வாழ்வுக்கும் ஏற்றதையே ஒழுக்கமாகக் கொண்டு – முக்கிய மாய் மனித சமுதாயத்திற்கு ஏற்றவண்ணம் அந் நியனுக்கு உதவி செய்வதும், அன்னியனுக்குத் தொந்தரவில்லாமல் நடந்து கொள்வதையே ஒழுக்க மாய்க் கருதுவார்கள்.
(‘குடிஅரசு’ 24.11.1940)