பிச்சைக்காரர்கள் அதிகம் எந்தெந்த மாநிலங்களில்?
2018 மார்ச் 20 அன்று, ஒன்றிய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் (பா.ஜ.க.) மக்களவையில் எழுத்து வடிவில் அளித்த பதிலில் 2011-ஆம் ஆண்டு கணக்குப் படி, மாநில வாரியாக பிச்சைக்காரர்கள் மற்றும் எண்ணிக்கை (10000-க்கு மேலே உள்ள மாநிலங்கள்)
மேற்கு வங்கம் – (81,244)
உத்தரப் பிரதேசம் – (65,835)
ஆந்திரப் பிரதேசம் – (30,218)
பீகார் – (29,723)
மத்தியப் பிரதேசம் – (28,695)
ராஜஸ்தான் – (25,853)
மகாராட்டிரா – (24,307)
அசாம் – (22,116)
ஒடிசா – (17,965)
குஜராத் – (13,445)
கருநாடகா – (12,270)
ஜார்க்கண்ட் – (10,819)
சத்தீஸ்கர் – (10,198)
இந்தியாவின் அப்போதைய மொத்த பிச்சைக் காரர்களின் எண்ணிக்கையான 4,13,670-இல் இந்த 13 மாநிலங்களும் 90.9 சதவீத (372,688) பிச்சைக்காரர்களைக் கொண்டுள்ளன.
ஒரு வேளை இந்தப் பட்டியலை இப்போது எடுத்தால், 11 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம் தெரியும். இவற்றில் பெரும்பாலானவை ஹிந்தி பேசும் மாநிலங்கள் தான் (உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர்) என்பது குறிப்பிடத்தக்கது.
“க்யா ஆப்கோ பதா ஹை கி ஹிந்தி சீக்னே சே ஆப்கே ஜீவன் பெஹ்தர் கைசே ஹோ சக்தா ஹை?” (நீங்கள் ஹிந்தி கற்றால் எப்படி நன்றாக வாழலாம் தெரியுமா?)
ஜீ… முதல்ல உங்க மாநிலங்களைப் பாருங்க!
– குப்பைக் கோழியார்