மனித உடலில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், ஆரோக்கியமாக வைக்கவும் சிறுநீரகங்கள் உதவுகின்றன.
சிறுநீரக நோய் வராமல் இருப்பதற்கு சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முறையான உடற்பயிற்சி மூலம் ரத்த அழுத்தமும் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க வேண்டும். சமச்சீரான உணவு உண்ண வேண்டும்.
புகைப் பிடிப்பதையும், புகையிலைப் பொருள்களையும் தவிர்க்க வேண்டும். வலிகொல்லி மாத்திரைகளை மருத்துவர்கள் அனுமதியின்றி உட்கொள்ளக் கூடாது.
தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். ஆண்டிற்கு ஒருமுறை முழுஉடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.