புதுடில்லி, மார்ச் 15- யமுனை நதியில் உள்ள நீரின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குரோமியம், துத்தநாகம் போன்ற உலோகங்கள் அதிக அளவில் கலந்துள்ளதாக நாடாளுமன் றத்தில் நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்தது.
நச்சுத்தன்மையுள்ள நுரை
யமுனை நதி இமயமலையில் தோன்றி உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், அரியானா, டில்லி, ஆகிய 4 மாநிலங்களை கடந்து செல்கிறது. கங்கை மற்றும் யமுனை நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இது உத்தரப்பிரதேச மாநிலம் பிர யாக்ராஜில் அமைந்துள்ளது. இங்குதான் மகா கும்பமேளா நடை பெற்றது.
டில்லியில் யமுனை நதி மாசடைந்து காணப்படுகிறது. தொழிற்சாலையின் கழிவு நீர் மற்றும் குடியிருப்புப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் போன்றவை நதியில் கலப்பதன் காரணமாக, நதி நச்சுத் தன்மை கொண்டநுரையால் மூடப் பட்டுள்ளது. நுரையை கட்டுப்படுத்த ரசாயனம் தெளித்து அதனை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆபத்தான அளவு
இதற்கிடையே நீர்வளங்களுக் கான நாடாளுமன்ற நிலைக்குழு யமுனை நதியின் நீர் தரம் குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது;-
ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2023ஆம் ஆண்டு மே மாதம் வரை யமுனை நதியில் 33 இடங்களில் நீர் எடுத்து அதனை ஆய்வு செய்தது. இதில் டில்லியில் ஓடும் யமுனை நதியில் எடுக்கப்பட்ட 23 இடங்கள் நீர் தர சோதனையில் அதிக மாசு அடைந்துள்ளது தெரியவந்தது. டில்லி பகுதியில் ஓடும் 40 கி.மீ. தூர யமுனை நதியில் உயிர்கள் வாழ உகந்ததாக இல்லை. யமுனையில் குரோமியம், தாமிரம், ஈயம். நிக்கல், துத்தநாகம் போன்ற உலோகங்கள் அதிக அளவில் இருப்பது கண்டறி யப்பட்டது.
டில்லி, உத்தரப்பிரதேசத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்ட போதிலும், மாசு அளவுளைவிட ஆபத்தான அளவில் அதிக மாக இருக்கிறது. யமுனை நதி நீர் ஆய்வு செய்த 33 இடங்களில் உத்தராகண்ட், இமாசலபிரதேசத்தில் தலா 4 இடங் களில் மட்டுமே நீர்தர அளவுகோல்களை பூர்த்தி செய்தன. அரியானாவில் உள்ள 6 இடங்களில் எடுத்த நீர் சோதனையில் அதிக மாசு இருந்தது பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.
யமுனை வெள்ளப்பெருக்கு பகுதி களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்று வதை விரைவுபடுத்தவும், வெள்ளப்பெ ருக்கு சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெ டுப்பதை உறுதி செய்யவும் மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற நீர்வ எம். நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்து ணர்வு துறையை குழு வலியுறுத்தி இருக்கிறது மாசுபாட்டைகளையவும், நதியின் ஆரோக்கியத்தை மீட் டெடுக்கவும் அனைவரிடம் இருந்தும் ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.