தமிழ்ச் சுவடியியல் பட்டயப் படிப்பு விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழ்ச் சுவடியியல் மற்றும் பதிப்பியல் ஓராண்டுப் பட்டயப் படிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. விண்ணப்பத்தினை www.ulakaththamizhi.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொளள்லாம். கட்டணம் ரூ.3,200. கல்வித் தகுதி குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு கிடையாது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் வங்கி வரைவோலையுடன் (Director, International Institute of Tamil Studies என்ற பெயரில் எடுக்கப்பட வேண்டும்.) ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். எழுத்துத் தேர்வு ஏப்ரல் 11ஆம் தேதி. மேலும் தகவலுக்கு 044-2254992. 96000 21709 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்ட மருந்தகங்கள் மீது நடவடிக்கை
மருந்துக் கடைகளில் பொதுவாகவே மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்வது தவறான செயலாகும். அதிலும், சில முக்கிய மருந்துகளை அவ்வாறு விற்பனை செய்வது சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். அதன்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தற்போது வரை விதிகளுக்குப் புறம்பாக மருந்து விற்பனையில் ஈடுபட்டதாக சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 17 மக்கள் மருந்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 8 பேருக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. மற்றவர்களும் விதிமீறல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.சிறீதர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்த ஆலோசனை
இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளுடன் அவ்வப்போது ஆலோசனைகளை நடத்தி தேர்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கடிதங்கள் அனுப்பி அவர்களின் தேதி மற்றும் நேரத்துக்குத் தகுந்தாற்போன்று ஆலோசனைகளை நடத்தலாம் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. இந்தப் பணிகளை ஏப்.30ஆம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
செய்திச் சுருக்கம்
Leave a Comment