கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

14.3.2025
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* மருத்துவ முதுகலை படிப்பு இடங்களில் மாநில வசிப்பிடம் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் மார்ச் 16இல் ஆர்ப்பாட்டம்.
* வடமாநிலங்களில் ஒரு மொழி தான் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை இல்லை: ப.சிதம்பரம் பேட்டி
* தமிழ்நாடு அரசின் பொருளாதாரக் கொள்கை அறிக்கை வெளியீடு; 8 சதவீதத்திற்கும் மேலாக வளர்ச்சி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தமிழ்நாடு அரசு நடத்தும் தொகுதி மறுவரையறை கூட்டத்தில் கே.சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சி கலந்து கொள்ள முடிவு.
* தெலங்கானாவிலும்தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும், முதலமைச்சர் ரேவந்த் சென்னை கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர் நேரு, கனிமொழி,எம்.பி. ஆகியோர் நேரில் அழைப்பு.
* அரசு வெளியிட்ட இலச்சினையில் ரூ.வாக மாறிய ₹ இந்திக்கு பதில் தமிழில் ரூபாய் குறியீடு: இன்று தாக்கலாகும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சென்னையில் நடைபெறும் தொகுதி மறுவரையறை கூட்டத்திற்கு ஜெகன் மோகன் ரெட்டிக்குதிமுக அழைப்பு.
* நாடு முழுவதும் தேர்வு வினாத்தாள் கசிவு அதிகரித்து வருவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். இது 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் ஒரு “முறையான தோல்வி” என கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சென்னையில் மார்ச் 22இல் நடைபெறும் தொகுதி மறுவரையறை குறித்த கூட்டத்தில் கருநாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பங்கேற்பு.
தி இந்து:
* எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணத்திற்கு அனுமதி அளித்த தனி நீதிபதி உத்தரவு இரு நீதிபதிகள் அமர்வில் ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
* சென்னையில் மார்ச் 22இல் நடைபெறும் தொகுதி மறுவரையறை குறித்த கூட்டத்தில் பங்கேற்க அகாலி தளம் முடிவு.
* ஹோலியை எதிர்த்தால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்: உத்தரப்பிரதேச அமைச்சரவை அமைச்சரும் நிஷாத் கட்சியின் தலைவருமான சஞ்சய் நிஷாத் பேச்சு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியா வருவதை இதுவரை எதிர்த்து வந்த ஏர்டெல் மற்றும் ஜியோ இப்போது திடீரென உடன்படிக்கை செய்து கொள்வது ஏன்? ஸ்டார்லிங்க் உரிமையாளர் எலோன் மஸ்க் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் “நன்மதிப்பை வாங்க” பிரதமர் மோடி “திட்டமிடப்பட்டவையா?” என காங்கிரஸ், சி.பி.எம். கேள்வி.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *